For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்தது!

Google Oneindia Tamil News

முசாபர்நகர்: கும்பல் வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது.

இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர்.

Sedition case register against 49 Clebs including Maniratnam

இந்த கடிதத்துக்கு எதிராக பீகாரின் முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். அதில், பிரபலங்கள் எழுதிய இந்த கடிதம் தேசத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறது; பிரதமர் மோடிக்கு அவதூறு ஏற்படுத்துகிறது. இந்த கடிதம் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானது என சுதிர் ஓஜா குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த முசாபர்நகர் தலைமை மாஜிஸ்திரேட் சுதிர் காந்த், அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து முசாபர்நகர் போலீசார் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதும் தேசதுரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை போட்டப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிய காரணத்துக்காகவே பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

English summary
Bihar Police had registered 49 celebrities including Mani Ratnam an open letter to Prime Minister Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X