• search

அர்ணாப் அண்டப்புளுகு.. அம்பலப்படுத்திய ராஜ்தீப் சர்தேசாய்!

By Gajalakshmi
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   அர்ணாப் அண்டப்புளுகு.. அம்பலப்படுத்திய ராஜ்தீப் சர்தேசாய்!-வீடியோ

   டெல்லி: மூத்த பத்திரிக்கையாளரும் இந்தியா டுடேவின் கன்சல்ட்டிங் எடிட்டருமான ராஜ்தீப் சர்தேசாய், ரிபப்ளிக் டிவியின் தலைமை எடிட்டர் அர்ணாபின் பொய்யை அம்பலப்படுத்தியது டுவிட்டரில் அனல் பறந்தது.

   கடந்த ஓராண்டுக்கு முன்னர் அர்ணாப் கோஸ்வாமி நிகழ்ச்சி ஒன்றில் குஜராத் கலவரத்தில் தனக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த வீடியோ வைரலாகவும் பரவியது.

   ஆனால் அந்த வீடியோவில் லிங்கை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ராஜ்தீப் சர்தேசாய் அர்ணாப் கோஸ்வாமி குஜராத் கலவரம் பற்றி பேசுகிறார். "அடடே என் நணபர் அவருடைய கார் குஜராத் கலவரத்தின் போது முதல்வர் வீடு அருகே தாக்கப்பட்டதாக கூறுகிறார். உண்மை என்னவென்றால் அவர் அஹமதாபாத் கலவர செய்தியின் போது செய்தி களத்திலேயே இல்லை" என்று போட்டு உடைத்தார்.

   இதனைத் தொடர்ந்து அடுத்த டுவீட்டில் பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை உண்டு, ஆனால் இதைப் பார்க்கும் போது நானும் இந்தத் தொழிலில் இருக்கிறேனே என்று வருத்தமாக இருக்கிறது என்றும் சர்தேசாய் பதிவிட்டிருந்தார். இதனிடையே அர்ணாப் கோஸ்வாமி குஜராத் கலவரம் பற்றி பேசும் அந்த வீடியோ யூ டியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

   உண்மை இல்லை

   மேலும் அர்ணாப் கோஸ்வாமி குஜராத் கலவரத்தில் அவர் கார் தாக்கப்பட்டதாக சொல்வதில் உண்மை இல்லை என்று ராஜ்தீப் கூறியிருந்தார். அர்ணாப் பொய் தான் சொல்கிறார் என்று அவருடன் இணைந்து பணியாற்றி ஊடகவியலாளர்கள் 3 பேர் தெரிவித்துள்ளனர்.

   சம்பவத்தை விவரித்த அர்ணாப்

   சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் அர்ணாப் கோஸ்வாமி பேசியதாவது : 2002ல் முதல்வர் வீட்டிற்கு 50 அடி தள்ளி எங்களுடைய அம்பாசிடர் கார் தடுத்து நிறுத்தப்பட்டது, மக்கள் எங்களுடைய காரின் கண்ணாடியை திரிசூலத்தை வைத்து உடைத்தனர், எல்லா ஜன்னல்களும் உடைந்தன. எங்களைச் சுற்றியும் திரிசூலங்களாக இருந்தன. நிச்சயமாக இது நல்ல சம்பவம் கிடையாது, ஆனால் என் வாழ்வில் என்ன நடந்தது என்பதைத் தான் நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

    கலவரக்காரர்களிடம் சிக்கிய நேரம்

   கலவரக்காரர்களிடம் சிக்கிய நேரம்

   அப்போது எங்களின் மதத்தின் பெயரைச் சொல்லச் சொன்னார்கள். முதல்வர் வீட்டில் இருந்து 50 அடி தூரத்தில் இது நடந்தது, இது எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் ஊடகவியலாளர்கள் என்று சொன்னோம். அதெல்லாம் தேவையில்லை நீங்கள் எந்த மதம் என்று சொல்லுங்கள் எனக் கேட்டார்கள். அதிர்ஷ்டவசமாக எங்களுடன் மைனாரிட்டி பிரிவைச் சேர்ந்த யாரும் இல்லை.

    கொடூரமான சம்பவம்

   கொடூரமான சம்பவம்

   நான் காரில் முன் பக்கம் அமர்ந்திருந்தேன், எங்களுடைய கார் ஓட்டுநர் கையில் ஹேராம் என்று டேட்டு ஒட்டியிருந்தார், நாங்கள் அதைக்காண்பித்த பிறகு அவர்கள் எங்களை போக அனுமதித்தனர். ஆனால் நினைத்துப் பார்க்கவே மிகக் கொடூரமான சம்பவம் அது என்றும் அர்ணாப் பேசியிருந்தார்.

    சம்பவம் நடந்தது சர்தேசாய்க்கு

   சம்பவம் நடந்தது சர்தேசாய்க்கு

   அர்ணாப் கோஸ்வாமி அந்த வீடியோவில் சொல்லும் சம்பவம் கற்பனைக் கதை. இந்த சம்பவம் நடந்தது உண்மை தான் ஆனால் அந்த சம்பவத்தில் சிக்கியது அர்ணாப் அல்ல ராஜ்தீப் சர்தேசாய். ராஜ்தீப் என்டிடிவி தொலைக்காட்சியில் பணியாற்றிய போது தன்னுடைய குழுவுடன் குஜராத் கலவரச் செய்தியை சேகரித்துள்ளார். அவருடைய 2014 புத்தகத்தில் இந்தியாவை மாற்றிய தேர்தல் என்று சர்தேசாய், அர்ணாப் சொன்ன அதே சம்பவத்தை விவரித்துள்ளார்.

    சர்தேசாய் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சம்பவம்

   சர்தேசாய் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சம்பவம்

   அந்த புத்தகத்தில் தேசாய் குறிப்பிட்டுள்ளதாவது: முதல்வர் அப்போது தான் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக எங்களிடம் உறுதியளித்தார். ஆனால் அவருடைய காந்திநகர் வீட்டிற்கு அருகிலேயே விஎச்பி பஜ்ரங்க் தள் ஆதரவாளர்கள் எங்களது காரை வழிமறித்து நீங்கள் இந்துவா, முஸ்லீமா என்று கேட்டனர்.

    மிரட்டிய வன்முறையாளர்கள்

   மிரட்டிய வன்முறையாளர்கள்

   ஆனால் நாங்கள் அனைவருமே இந்துக்கள், எங்களது ஓட்டுநர் மட்டும் முஸ்லீம், ஆனால் அதை நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் பத்திரிக்கையாளர்கள் என்று சொல்லியும் கலவரக்காரர்கள் கேட்கவில்லை. அதன் பிறகு என்னுடைய கேமராமேன் அப்போது முதல்வராக இருந்த மோடியின் பேட்டியை போட்டுக் காண்பித்த பின்னர் சிறிது நேரம் பார்த்துவிட்டு அவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

    நிஜ நிகழ்வு

   நிஜ நிகழ்வு

   நினைத்துப் பார்க்கவே கொடூரமான சம்பவம் இது, முதல்வரின் வீட்டிற்கு அருகிலேயே இந்து தீவிரவாதக் குழுக்கள் எங்களை பயங்கர ஆயுதத்துடன் மிரட்டினர். பின்னர் எப்படி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவார் முதல்வர் என்பதே எங்களுடைய அப்போதைய கேள்வியாக இருந்தது என சர்தேசாய் அதில் குறிப்பிட்டுள்ளார்.

   வசை வாங்கிய அர்ணாப்

   இதைத் தான் அர்ணாப் தான் சந்தித்த சம்பவமாக விவரித்த வீடியோவால் சர்ச்சை எழுந்தது. அர்ணாபின் உண்மை முகத்தை துகிலுறித்துக் காட்டிய ராஜ்தீப் சர்தேசாய் பதிவால் பலரும் அர்ணாப் கோஸ்வாமி ஊடகவியலாளராகவே இருக்கத் தகுதியற்றவர் என்று வசைபாடி தீர்த்து விட்டனர்.

   திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   India today's Consulting Editor Rajdeep Sardesai exposed his former colleague Republic Tv Editor in Chief Arnab Goswami's lie about covering Gujarat riots of 2002.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more