அட்டர் பிளாப் பெங்களூரு கூட்டம்- அமித்ஷா அப்செட்... கர்நாடகா பாஜகவிடம் விளக்கம் கேட்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  70% சேர்கள் காலி..பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள் வராததால் அமித்ஷா அப்செட்!- வீடியோ

  பெங்களூரு: தாம் பங்கேற்ற பெங்களூரு பொதுக்கூட்டத்துக்கு கட்சி தொண்டர்கள் கூட வராமல் போனது தொடர்பாக கர்நாடகா பாஜகவிடம் விளக்கம் கேட்டிருக்கிறாராம் அக்கட்சியின் தேசியத் தலைவர் பாஜக.

  கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜகவின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா பரிவர்த்தன் யாத்திரை என்ற பெயரில் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

  இப்பிரசாரத்தை தொடங்கி வைக்கும் பொதுக்கூட்டம் பெங்களூரு அருகே நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார்.

  கூட்டமே இல்லை

  கூட்டமே இல்லை

  கர்நாடகாவில் அடுத்தது தங்களது ஆட்சிதான் என கூறிவருகின்றனர் பாஜக. ஆனால் அந்த கட்சியின் தேசியத் தலைவர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் அதிக அளவில் கலந்து கொள்ளவில்லை. பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் பெருமளவு இருக்கைகள் காலியாகவே இருந்தன.

  கர்நாடகா பாஜகவிடம் விளக்கம்

  கர்நாடகா பாஜகவிடம் விளக்கம்

  இதனால் அமித்ஷா மிகவும் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறாராம். இதையடுத்து பாஜக பொதுச்செயலாளர் முரளிதர் ராவிடம் ஏன் பெங்களூரு பொதுக்கூட்டத்துக்கு தொண்டர்கள் வரவில்லை என கர்நாட்கா தலைவர்களிடம் விளக்கம் கேட்குமாறு கூறியிருக்கிறார்.

  வந்தது சொற்பம்

  வந்தது சொற்பம்

  அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு எப்படியும் லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரளுவார்கள் என்றுதான் பாஜக நம்பிக் கொண்டிருந்ததாம். ஆனால் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் திரும்பிய திசையெல்லாம் காலி இருக்கைகள்தான் என்பதால்தான் அமித்ஷா கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.

  பாதியிலேயே ரத்து

  பாதியிலேயே ரத்து

  ஏற்கனவே கேரளாவிலும் இதேபோல் யாத்திரை நடத்தப் போயிருந்தார் அமித்ஷா. ஆனால் அங்கேயும் கூட்டம் கூடவில்லை. அதுவும் சர்ச்சைக்குரிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையெல்லாம் கூட அழைத்துப் போனார்கள். ஆனால் பாஜக நினைத்தபடி கூட்டம் கூடாமல் போனதால் அமித்ஷா அந்த பயணத்தையே ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP National President Amit Shah now sought a report From Karnataka BJP on the poor turnout at Bengaluru yatra.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற