ஆட்டோ டிரைவரை கட்டாயப்படுத்தி உறவு கொள்ள முயன்ற 32 வயது பெண் கைது
டெல்லி: டெல்லியில் 32 வயது பெண் ஒருவர் ஆட்டோ டிரைவரை கட்டாயப்படுத்தி அவருடன் உறவு கொள்ள முயன்றதற்காக போலீசார் அவரை கைது செய்தனர்.
தெற்கு டெல்லியில் உள்ள சாகெத் பகுதியில் ரேணு லால்வானி(32) என்ற பெண் தான்சானியாவைச் சேர்ந்த தனது தோழியுடன் உமேஷ் பிரசாத்(41) என்பவரின் ஆட்டோவில் கடந்த புதன்கிழமை மதியம் ஏறியுள்ளார். அர்ஜுன் நகரை அடைந்த உடன் ரேணு எனது வீட்டிற்கு வாருங்கள் ஆட்டோவுக்கு பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து உமேஷ் ரேணுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்குள் நுழைந்ததும் ரேணு ஆட்டோ டிரைவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். உடனே ரேணு கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு உமேஷை உறவுக்கு அழைத்துள்ளார். அவர் மறுத்துள்ளார்.
ரேணு உமேஷுக்கு மது கொடுத்துள்ளார். ஆனால் அவர் அதை குடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து ரேணு உமேஷின் ஆடைகளை கிழித்து அவரை முத்தமிட்டு அவருடன் உறவு கொள்ள முயன்றுள்ளார். இந்த சம்பவத்தை ரேணுவின் தோழி வீடியோ எடுத்துள்ளார். ஒரு மணிநேரம் கழித்து ரேணுவும், அவரது தோழியும் பக்கத்து அறைக்கு சென்றபோது உமேஷ் முதல்மாடியில் இருக்கும் அந்த வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் உமேஷின் கால் எலும்பு முறிந்தது. இந்த சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேணுவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது தோழி ஹிதிஜாவை தேடி வருகிறார்கள்.
ரேணுவிடம் இருந்து நான்கு ஆட்டோ டிரைவர்களின் பேட்ஜ் மற்றும் ஓட்டுனர் உரிமங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் அவர் பல ஆட்டோ டிரைவர்களை உறவுக்கு அழைத்திருப்பார் என்று போலீசார் கருதுகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications