For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததாலேயே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது.. சுப்ரீம் கோர்ட்

எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலே அவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது, தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    1765 எம்பி, எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

    டெல்லி: எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலே அவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது, தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இதன் மூலம் பல குற்றவழக்குகளில் சிக்கி இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் நிம்மதி அடைந்து இருக்கிறார்கள். எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

    2011ல் பல தனி நபர்கள், அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்தது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான பென்ச் இன்று காலை தீர்ப்பு வழங்கி உள்ளது.

    இப்போது என்ன நடைமுறை

    இப்போது என்ன நடைமுறை

    இப்போதும் எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. ஆனால் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்தால் மட்டுமே தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் பல முக்கிய அரசியல்வாதிகள் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    ஆனால் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்தால் மட்டுமே தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் பல முக்கிய அரசியல்வாதிகள் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    [என் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.. வேட்பாளர்கள் விளம்பரம் கொடுக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு]

    எத்தனை

    எத்தனை

    மொத்தமாக சட்டமன்றம், நாடளுமன்றம் என்று சேர்த்து இந்தியா முழுக்க 4896 எம்எல்ஏக்கள், மற்றும் எம்பிக்கள் இருக்கிறார்கள். இவர்களில் 36 சதவிகிதம் அதாவது 1765 பேர் குற்றவழக்குகளில் சிக்கி இருக்கிறார்கள். மொத்தமாக இவர்களுக்கு எதிராக 3045 வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது. இதில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது.

    என்ன ஆகும்

    என்ன ஆகும்

    இந்த நிலையில் 2011ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் ம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று கூறப்பட்டது. இந்த கோரிக்கையில் வைத்து இருப்பது போல சட்டம் மாற்றப்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் 1765 எம்பி எம்.எல்.ஏக்கள் எல்லோரும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிவரும்.

    இன்று தீர்ப்பு

    இன்று தீர்ப்பு

    இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளின் பென்ச் இந்த தீர்பபை வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு முன் அளித்துள்ள மிக முக்கியமான தீர்ப்புகளில் இதுவும் ஒன்றாகும். அதன்படி எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலே அவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது, தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    என்ன அறிவுரை

    என்ன அறிவுரை

    மேலும் நீதிமன்றம், அரசியல் காட்சிகள்தான் இதில் நாகரீகமாக செயல்பட வேண்டும். அவர்கள்தான் குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் இருக்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க முடியாது. அரசியலில் ஊழல் வளருவது வேதனை அளிக்கிறது, என்றுள்ளது.

    English summary
    The Supreme Court will deliver a very important verdict in which it would decide if lawmakers facing criminal trial should be disqualified or not. The verdict would have far reaching effects.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X