கருப்பு பணம் பதுக்கிய சோனியா, ராகுல் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை?: சு. சாமி
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் 3 தொழில் அதிபர்களின் பெயரை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் அதில் இருவர் தங்களுக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்கே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறுகையில்,
ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என நான் மத்திய நிதி அமைச்சகத்திற்கும், ஆணையத்திற்கும் கடிதம் எழுதினேன். ஆனால் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் 8 பேரின் பெயர்களாவது கருப்பு பணம் பதுக்கியிருப்பவர்களின் பட்டியலில் உள்ளதே என்றார்.
UPA govt had given amnesty to about 100 black money illegal foreign bank account holders. At least release that list
— Subramanian Swamy (@Swamy39) October 27, 2014 இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை வைத்திருக்கும் சுமார் 100 பேருக்கு பொது மன்னிப்பு அளித்துள்ளது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. அந்த பட்டியலையாவது வெளியிடுங்களேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications