For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8-10 மணி நேரம் காத்திருக்கும் பிணங்கள்.. சுடுகாடும் போதவில்லை.. அதிர்ச்சியில் சூரத் நகரம்

Google Oneindia Tamil News

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் தினசரி கோவிட் -19 கேஸ்களின் அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சுடுகாட்டை மீண்டும் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கோவிட் வழிகாட்டுதல்களின்படி சூரத்தில் தினமும் 100 க்கும் மேற்பட்ட சடலங்கள் தகனம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக 8-10 மணி நேரம் உடலுடன் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 15 ஆண்டுகளாக மூடப்பட்ட சுடுகாட்டை மீண்டும் திறக்க புனே மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

1 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ள சுடுகாட்டில் ஒரு நேரத்தில் 30 பேரை எரிக்க முடியும்.

உடல்கள்

உடல்கள்

பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலர் நிலேஷ் படேல் கூறுகையில், கூட்டம் அதிகமாக இருப்பதைத் தவிர்ப்பதற்காக சுடுகாட்டை மீண்டும் திறக்க முடிவு எடுத்தோம். தற்போது நாங்கள் இங்கே கோவிட் -19 உடல்களை மட்டுமே தகனம் செய்கிறோம். " என்றார்.

புதிய சுடுகாடு

புதிய சுடுகாடு

சூரத்தின் பால், லிம்பாயத் மற்றும் மோட்டா வராச்சாவில் உள்ள சுடுகாட்டில் தகன வசதிகள் இல்லாததால் பல ஆண்டுகளாக செயல்படவில்லை. மூன்று தகனங்களும் அறக்கட்டளைகளால் நடத்தப்படுகின்றன, யாரிடமும் தகன மேடைகள் இல்லை என்பதால் பழைய சுடுகாட்டை திறந்துள்ளனர்.

சூரத்தில் ஊரடங்கு

சூரத்தில் ஊரடங்கு

குஜராத்தின் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரிப்பதால் அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக சூரத்தில் நிலைமை முன்பைவிட மோசமாகி வருகிது. இதையடுத்து கொரோனா பரவுவதைத் தடுக்க சூரத் நகரில் தற்போது நடைமுறையில் உள்ள இரவு ஊரடங்கு உத்தரவு மாவட்டத்தின் கிராமப்புறங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recommended Video

    Mutated Coronavirus அறிகுறிகள் என்ன? Corona 2nd Wave எதனால்? | Double Mutant Variant
    இரவு நேர லாக்டவுன்

    இரவு நேர லாக்டவுன்

    குஜராத் அரசு கடந்த வாரம் சூரத் உட்பட மாநிலத்தின் 20 நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

    சூரத் கலெக்டர் தவால் படேல் சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப்ரல் 31 வரை மாவட்டத்தின் சூரத்தின் கிராமப்புறங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டித்தார். இந்த அறிவிப்புப்படி ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

    English summary
    the renewed spike in daily Covid-19 cases and deaths in Gujarat's Surat has prompted the authorities to reopen a crematorium that was lying closed for 15 years. While over 100 bodies are being cremated daily in Surat as per the Covid guidelines, there still is an 8-10 hour waiting which is why the administration has decided to reopen a crematorium that was closed for the last 15 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X