இலங்கையில் அவசரநிலை பிரகடனத்திற்கு நடுவே இந்தியா வந்த மைத்ரிபாலா சிறிசேனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை ராஷ்டிரபதி பவனில் சந்தித்து பேசினார்.

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் மற்றும் சிங்களர்கள் நடுவே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டம் அமலில் உள்ளது. சோஷியல் மீடியாக்கள் முடக்கப்பட்டுள்ளன.

Sri Lanka President Maithripala Sirisena called on Indian President Ramnath Kovind

இந்நிலையில், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் துவக்க நாடுகளின் சார்பில் டெல்லியில் நாளை நடைபெறும் முதல் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று இந்தியா வந்தடைந்தார்.

குடியரசு தலைவர் மாளிகையில் இன்று மாலை 6 மணியளவில் அவர் ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மாநாட்டை நிறைவு செய்துவிட்டு ஜப்பான் செல்கிறார் மைத்ரிபாலா சிறிசேனா.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sri Lankan President Maithripala Sirisena today left on a foreign tour even as his country has been hit by communal violence that has killed at least two people.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற