இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்.. சுகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா.. நாளை தெரியும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜாமீன் கோரி சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதற்காக 60 கோடி ரூபாய் பேரம் பேசி, முன்பணமாக 1 கோடியே 30 லட்சம் ரூபாய் தினகரனால் தரப்பட்டதாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்தார்.

Sukesh bail plea comes tomorrow in Delhi court

டெல்லியில் கடந்த மாதம் 16ம் தேதி இரவு புதிய ரூபாய் நோட்டுகளுடன் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து, சுகேஷ் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர், அவரையும் திகார் சிறையில் போலீசார் அடைத்தனர்.

சிறையில் இருக்கும் அவர் தனக்கு ஜாமீன் தேவை என டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நாளை விசாரிக்கப்பட உள்ளது. இதன் பின்னரே இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் முக்கிய குற்றவாளியான சுகேஷிற்கு ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது தெரிய வரும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sukesh, who arrested for two leaves bribery case, bail plea will come tomorrow in Delhi court.
Please Wait while comments are loading...