1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அமிர்தசரஸ் பொற்கோயில் மீதான ராணுவத் தாக்குதலையடுத்து, அக்டோபர் 31, 1984 அன்று இந்திரா காந்தியை அவருடைய சீக்கிய பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர்.

படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல ஆயிரம் சீக்கியர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸாரால் தாக்கப்பட்டனர்.

3000 பேர் படுகொலை

3000 பேர் படுகொலை

இந்த வன்முறையில் 2700க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பலர் உயிருடன் கொளுத்தப்பட்டனர். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் பாதிக்கப்பட்டனர்.

பெண்கள் பாலியல் வன்முறை

பெண்கள் பாலியல் வன்முறை

பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாயினர். இந்த கலவரத்தில் டெல்லியின் திரிலோக்புரி, மங்கோல்புரி, டிரான்ஸ்-யமுனா காலனிகள், சுல்தான்புரி, பாலம் காலனி பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்

ஆய்வு செய்யப்போவதாக அறிவிப்பு

ஆய்வு செய்யப்போவதாக அறிவிப்பு

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முடித்து வைக்கப்பட்ட 241 வழக்குகளின் சிறப்புக் குழு அறிக்கையை ஆய்வு செய்யப்போவதாக அண்மையில் தெரிவித்திருந்தது.

மீண்டும் விசாரிக்க உத்தரவு

மீண்டும் விசாரிக்க உத்தரவு

இந்நிலையில் கடந்த 1984 ஆம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிரான நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவால் மூடப்பட்ட 186 வழக்குகளை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குழுவை அமைத்தது சுப்ரீம் கோர்ட்

குழுவை அமைத்தது சுப்ரீம் கோர்ட்

இந்த வழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் குழுவையும் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Supreme Court has issued a directive to reopen 186 cases closed by the Special Investigation Team in connection with the 1984 anti-Sikh riots. The Supreme Court has ordered a three-member panel headed by retired judge to investigate these cases.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X