For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஒரே குழப்பம்.. ஜனாதிபதியைப் பார்த்து சொல்லிட்டாராம் சு. சாமி... !

தமிழகத்தில் நிலவும் குழப்ப சூழ்நிலை குறித்து குடியரசுத் தலைவரிடம் கூறியுள்ளதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலை குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளதாக சுப்பிரமணியம் சாமி டிவீட் போட்டுள்ளார்.

தமிழகம் பெரும் அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ளது. அதிமுகவில் மிகத் தாமதமாக பிளவு வெடித்துள்ளது. முதல்வர் பதவியைப் பிடிக்க படிப்படியாக காய் நகர்த்தி வந்தார் சசிகலா. ஆனால் ஆரம்பத்தில் அமைதியாக இருந்து விட்டு நேற்று இரவு முதல் புரட்சிக்காரராக மாறியுள்ளார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

Swamy meets President over TN fiasco

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சுப்பிரமணியம் சாமி டிவீட் போட்டுள்ளார்.

அவர் போட்டுள்ள ஒரு டிவீட்டில், ஜனாதிபதியை இப்போதுதான் சந்தித்தேன். அவரிடம் தமிழக சூழ்நிலை குறித்து விவரித்தேன் என்று கூறியுள்ளார்.

சாமி போட்டுள்ள இன்னொரு டிவீட்டில், அதிமுகவில் உட்கட்சிப் பூசல் நீடித்தால் நிலையான அரசுக்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். அதாவது நிலையான அரசு இல்லாவிட்டால் தமிழக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய நேரிடும் என அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

English summary
Subramaniam Swamy has said that he had met President Pranab Mukherjee over TN political fiasco.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X