ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் டவுன்ஷிப்: மோடி அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: தமிழகத்தில் ஜப்பான் உதவியுடன் தொழில் நகரம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வருகை தந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஷோவுடன் இணைந்து இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்றார், மோடி. அப்போது அவர் பேசியதாவது:

குஜராத்தின் முதல்வராக நான் முதல் முறையாக ஜப்பான் சென்றபோது, மினி ஜப்பானை குஜராத்தில் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தேன். இன்று அந்த கனவு நனவாகிவிட்டது.

Tamilnadu have been finalized for development of Japanese Industrial Townships: Modi

இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்கள், ஜப்பான் தொழில் நகர்ப்புறங்களை ஏற்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள திறமைவாய்ந்த பணியாளர்கள் ஜப்பானுக்கு உதவுவார்கள். 21வது நூற்றாண்டு என்பது ஆசியாவின் நூற்றாண்டு. உலக வளர்ச்சியில் ஆசியாதான் இப்போது மையப்புள்ளியாக உள்ளது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
4 locations have been finalized for development of Japanese Industrial Townships in Gujarat, Rajasthan, Andhra Pradesh & Tamil Nadu: PM

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற