For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிகாரர்களை பிடிக்க டிரோன்ஸ்... தெறிக்கவிடும் தெலுங்கானா போலீஸ்

தெலுங்கானா போலீஸ் குடிகாரர்களை பிடிப்பதற்காக சிறிய ரக 'டிரோன்' விமானங்களை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா போலீஸ் குடிகாரர்களை பிடிப்பதற்காக சிறிய ரக 'டிரோன்' விமானங்களை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது. இது போலீஸ் செல்ல முடியாத இடங்களுக்கு கூட சென்று குடிகாரர்களை கண்டுபிடிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

நான்கு இறக்கைகள் இருக்கும் 'டிரோன்' என அழைக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தற்போது நிறைய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக குடிகாரர்களை பிடிப்பதற்காக இந்த விமானங்களை தெலுங்கானா போலீஸ் பயன்படுத்த இருக்கிறது.

Telangana police to use drones to catch drinkers

இந்த திட்டத்தின் படி தெலுங்கானா முழுக்க 200க்கும் அதிகமான 'டிரோன்' விமானங்கள் வானத்தில் பறக்க விடப்படும். பெரும்பாலும் குடிகாரர்கள் இருக்கும் பகுதி என சந்தேகிக்கப்படும் இடங்களில் இந்த விமானங்கள் பறக்கவிடப்படும்.

இது அரை மணி நேரத்தில் 5 கிமீ பகுதியை எளிமையாக சோதனை செய்யும். மேலும் இதில் மிகவும் துல்லியமான 20 எம்.பி கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது.

இதற்காக போலீஸ் கட்டுப்பட்டு அறையில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இது சோதனை முயற்சியிலேயே சரியாக குடிகாரர்களை கண்டுபிடித்தது. இந்த வாரத்தில் இருந்து இந்த சோதனை முறை நடைமுறைக்கு வரும் என போலீசார் கூறியுள்ளனர்.

English summary
Telangana police to use drones to catch drinkers. This drone surveillance programme will be helpful to keep a watch on anti social elements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X