For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரிந்த ரூபாய் மதிப்பு.. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்புவது அதிகரிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய பொருளாதாரத்திற்கு இது மிகவும் மோசமான காலம் ஆகும். தொடர்ந்து இந்திய ரூபாய் மிக மோசமான நிலையை அடைந்து இருக்கிறது.

பல்வேறு காரணங்களால் பண மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும்.

இப்போது எவ்வளவு

இப்போது எவ்வளவு

நேற்று முதல்நாள் இந்த மதிப்பு சரிந்து 72 ரூபாய் ஆனது. அதன்பின் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. தற்போது மேலும் இதில் வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.38 ரூபாயை தொட்டது. இன்று மேலும் சரிந்தது. 49 பைசா இன்று சரிந்தது. இதனால் தற்போது 1 டாலருக்கு நிகரான மதிப்பு 71.87 ரூபாய் ஆகியுள்ளது.

அதிகம் அனுப்பும் வழக்கம்

அதிகம் அனுப்பும் வழக்கம்

இதனால் தற்போது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு குறைந்ததை அடுத்து அதிக அளவில் பணம் அனுப்புகிறார்கள். கத்தார், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் வீடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்புகிறார்கள்.

என்ன காரணம்

என்ன காரணம்

தற்போது 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.71.87ஆக உள்ளது. அதேபோல் மற்ற தினார் உள்ளிட்ட பணங்களுக்கு உரிய ரூபாய் மதிப்பும் குறைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாட்டு பணத்திலும் குறைவாக அனுப்பினாலே இந்திய ரூபாய் மதிப்பில் அது இன்னும் அதிகமாக இருக்கும். உதாரணமாக சென்ற வாரம் 5 அமெரிக்க டாலர் அனுப்பினால் இந்திய மதிப்பில் 350 ரூபாயாக இருக்கும். இன்று 5 டாலர் அனுப்பினால் அது 360 ரூபாயாக இருக்கும்.

லோன் எடுக்க தொடங்கி உள்ளனர்

லோன் எடுக்க தொடங்கி உள்ளனர்

இப்போது பணம் அனுப்பினால் அதிக லாபம் கிடைக்கும் என்று அனுப்புகிறார்கள். இதனால் சிலர் கடன் வாங்கி கூட பணம் அனுப்புகிறார்கள். வீட்டிற்கு பணம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் லோன் எடுக்க தொடங்கியுள்ளனர். சிலர் அடுத்த மாத சம்பளங்களை முன்பணமாக வாங்கியுள்ளனர்.

English summary
The decrease in Rupee Value: Indians rush to send cash home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X