”ஆட்டம் இன்னும் முடியல..” ஜனாதிபதி தேர்தலுக்கு மம்தா பானர்ஜி போடும் பிளான்.. பாஜகவுக்கு நேரடி சவால்
கொல்கத்தா: நாட்டில் பாதி எம்.எல்.ஏக்களை கூட வைத்திருக்காத பாரதிய ஜனதா கட்சிக்கு இம்முறை குடியரசுத் தலைவர் தேர்தல் அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்காது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருக்கிறார்.
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது பேசிய மம்தா பானர்ஜி, "சமாஜ்வாடி போன்ற கட்சிகள் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்து இருந்தாலும், கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதல் இடங்களில் வெற்றிபெற்று உள்ளன.

ஆட்டம் இன்னும் முடியவில்லை. இந்தியாவில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிபேர் கூட பாஜகவை சேர்ந்தவர்கள் கிடையாது. எனவே இம்முறை குடியரசுத் தலைவருக்கான அவ்வளவு எளிதாக இருக்காது." என்றார்.
தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி வரும் காவல்துறையை பாராட்டுகிறேன்.எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் கேலிக்கூத்தாக இருக்கின்றன." என்றார். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் கொல்லப்பட்டதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்த அவர், "காவல்துறை வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அரசியல் பாகுபாடு பார்க்காமல் தீவிர நடவடிக்கை எடுப்போம்." என்றார்.
மம்தா பானர்ஜியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏக்கள், ஜெய் பங்களா! பாரத் மாதா கி ஜே! என முழக்கமிட்டவாறு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications