For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானத்தில் நிறுத்தப்பட்டது இந்தியாவின் ''கண்''.. சாதனை படைத்த இஸ்ரோவின் சோட்டா பீம்!

இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக 31 செயற்கை கோள்களை அனுப்பி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்- வீடியோ

    ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக 31 செயற்கை கோள்களை அனுப்பி இருக்கிறது.

    இஸ்ரோவிற்கு இது பொன்னான மாதம் என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்ரோவின் மங்கள்யான் 2 திட்டமும் இந்த மாத தொடக்கத்தில்தான் தீவிரம் அடைந்தது. இஸ்ரோ தலைவராக கே சிவன் நியமிக்கப்பட்டதில் இருந்தே பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    கடந்த 14ம் தேதிதான் இஸ்ரோ மார்க்-3 ராக்கெட் மூலம் ஜிசாட் 29 செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதை தொடர்ந்து இன்று ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் உள்பட 31 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இருக்கிறது.

    ஏன் சோட்டா பீம்

    ஏன் சோட்டா பீம்

    இந்த 31 செயற்கை கோள்களும் சோட்டா பீம் என்று செல்லமாக அழைக்கப்படும், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. சோட்டா பீம் கார்ட்டூன் வைரல் ஆன சமயத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட்டிற்கு இந்த பெயர் வைக்கப்பட்டது . இந்த ராக்கெட்டின் மொத்த எடை வெறும் 380 கிலோதான். இவ்வளவு குறைந்த எடையில் நிறைய எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டு இருப்பதால் இதற்கு சோட்டா பீம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

    எத்தனை

    எத்தனை

    இந்த பிஎஸ்எல்வி ராக்கெட் மொத்தம் 31 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. இது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பப்படும் 45வது மிஷன் ஆகும். 31 ராக்கெட்டுகளை இது 2 வெவ்வேறு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும். இந்தியாவின் ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோளும் இதில் ஏவப்பட்டுள்ளது.

    முக்கியம்

    முக்கியம்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படும். மற்ற செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படும். இதற்கு மொத்தம் 112 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

    இது ஒரு கண்

    இது ஒரு கண்

    இந்த ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் இந்தியாவின் கூர்மையான புதிய கண் என்று அழைக்கப்படுகிறது. Hyper Spectral Imaging Satellite (HySIS) என்பதைத்தான் ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் என்று அழைக்கிறார்கள். இதை உலகில் சில நாடுகள் மட்டுமே சொந்தமாக உருவாக்கி உள்ளது. அதில் இந்தியாவும் ஒரு நாடு ஆகும்.

    ஏன் அப்படி

    ஏன் அப்படி

    இதில் இருக்கும் கேமரா மிகவும் துல்லியமானது. அதனால்தான் இதை இந்தியாவின் புதிய கூர்மையான கண் என்கிறார்கள். இது அகமதாபாத்தில் உள்ள ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டரில் உருவாக்கப்பட்டது. பல நாடுகள் இதை உருவாக்க இன்னும் முயன்று கொண்டு இருக்கிறது.

    மிக சிறப்பு

    மிக சிறப்பு

    இந்த ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் மூலம் பூமியின் பகுதிகளை மிக துல்லியமாக பார்க்க முடியும். இயற்கை சேதங்களை பல மடங்கு துல்லியமாக கணிக்க முடியும். விவசாயம், காடுகள், நதிகள், பேரிடர்களை மிக துல்லியமாக கண்டறிய முடியும். சீனா, அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமே இதற்கு முன் இந்த சாட்டிலைட்டை உருவாக்கி உள்ளது.

    English summary
    The HySis : ISRO launches its third eye on space with Chota Bheem help.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X