For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூவரின் தூக்குக் கயிறு அறுந்தது; பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மூன்று தமிழர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை இரத்து செய்து வழங்கிய தீர்ப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம், நீதியரசர் ரஞ்சன் கோகாய், நீதியரசர் சிவகீர்த்தி சிங் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு, ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை இரத்து செய்து வழங்கிய தீர்ப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்.

This is an historic judgment and will go down in golden letters in judicial history says Vaiko

உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சில் நிம்மதியையும் ஆறுதலையும் தந்துள்ள மகத்தான தீர்ப்பு ஆகும்.

பிரமாண வாக்குமூலம்

மத்திய அரசு வழக்கறிஞர் இம்மூன்று தமிழர்களும் சிறைச்சாலையில் மகிழ்ச்சியாக இருப்பதாக முன்வைத்த அபத்தமான வாதத்தை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் முற்றிலும் மறுத்துத் தெரிவித்த கருத்து யாதெனில், சிறைச்சாலையில் இந்த மூன்று தமிழர்களும் எவ்வளவு மனத்துன்பங்களுக்கு ஆளானார்கள் என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம் தெளிவாகக் கூறுகிறது.

ஆயுள் தண்டனையாக குறைப்பு

இத்தனை ஆண்டுகள் அவர்களின் கருணை மனுக்கள் மீதான முடிவு எடுக்கப்படாமல் காலதாமதம் ஆனதற்கு எந்த விளக்கமும் காரணமும் இல்லை என்பதனால், இந்த மூன்று பேரின் மரண தண்டனையை இரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றுகிறோம். எனினும், குற்ற இயல் நடைமுறைச் சட்டத்தின் 432 ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஆயுள் தண்டனையையும் மாநில அரசு குறைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறது.

தமிழக அரசு விடுவிக்க வேண்டும்

ஸ்ரீபெரும்புதூர் கொலைச் சம்பவத்தில் எள் அளவும் தொடர்பு இல்லாத நிரபராதிகளான மூன்று தமிழர்களையும், உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

தூக்குக்கு தடை

2011 ஆம் ஆண்டு இம்மூன்று தமிழர்களுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டபோது, புகழ்மிக்க வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரிய வாதங்களை முன் வைத்ததால், தூக்குத் தண்டனைக்கு தடை ஆணை கிடைத்தது.

ராம்ஜெத்மலானிக்கு நன்றிக்கடன்

காங்கிரஸ் கட்சி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது, உச்ச நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று மனு போட்டதால், வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த இரண்டரை ஆண்டுக் காலமாக ஒவ்வொரு வாய்தாவிலும் ராம்ஜெத் மலானி பங்கேற்று நிறைவாக அற்புதமான வாதங்களை எடுத்து வைத்தார். தமிழ்ச் சமுதாயம் ராம்ஜெத் மலானிக்கு நன்றிக் கடன்பட்டு இருக்கிறது என்று வைகோ கூறியுள்ளார். அதோடு நிற்காமல் நீதிமன்ற வளாகத்திலேயே ராம்ஜெத் மலானிக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி நன்றி கூறினார் வைகோ.

English summary
General Secretary of MDMK Vaiko, said “this is an historic judgment and will go down in golden letters in judicial history”. He appealed to the Tamil Nadu Chief Minister Jayalalithaa to take into consideration the judgment and order the release of the three convicts exercising the State government's powers under Section 432 Cr.P.C.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X