For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலாவுக்குப் "போகும்" 3 இந்தியர்கள்!

Google Oneindia Tamil News

மும்பை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கூகுள் லூனார் எக்ஸ்பிரைஸ் நடத்திய போட்டியில் மூன்று இந்திய மாணவர்களும், ஒரு அமெரிக்க மாணவரும் வெற்றி பெற்றுள்ளனர். விரைவில் அவர்களது பெயர் நிலாவில் பொறிக்கப்பட உள்ளது.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி விண்வெளி தொடர்பான ஓவியப் போட்டியை கூகுள் லூனார் எக்ஸ்பிரைஸ் நடத்தியது. இதில் கலந்து கொண்ட இந்திய அணியைச் சேர்ந்த 3 மாணவர்களும், அமெரிக்க மாணவர் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து இவர்களது பெயர்கள் ஒரு கியூபில் பொறிக்கப்பட்டு, அடுத்த முறை நாசா நிலவுக்கு அனுப்பும் விண்கலத்துடன் இணைக்கப்பட்டு அந்த கியூப் நிலாவுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கா ஏற்பாடுகளை டீம் இண்டஸ் என்ற இந்திய அமைப்பு மேற்கொள்ளும்.

இந்திய மாணவர்கள்...

இந்திய மாணவர்கள்...

இந்தப் பெருமையைப் பெற்ற மாணவர்கள் சதாராவைச் சேர்ந்த அனுஷ்கா தெலோர், கொல்கத்தாவைச் சேர்ந்த ரெய்சா ஸமான், பீகாரைச் சேர்ந்த சிவராம் செளரவ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அன்டோனியா ரமோஸ் ஆகிோயர் ஆவர்.

மார் இம்பீரியம்...

மார் இம்பீரியம்...

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி மூலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செலுத்தப்படும் விண்கலமானது இந்த கியூபை நிலாவில் கொண்டு போய்ச் சேர்க்கும். நிலாவில் இந்த கியூபானது மார் இம்பீரியம் என்ற இடத்தில் விடப்படும்.

கலாமின் முயற்சி...

கலாமின் முயற்சி...

மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் முயற்சியால் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாசாவின் உதவியுடன் இது நடத்தப்பட்டு வருகிறது. ஓவியம், கவிதை, கட்டுரை உள்ளிட்டவை இந்தப் போட்டியில் இடம் பெறும்.

ஆன்லைன் போட்டி...

ஆன்லைன் போட்டி...

இது ஆன்லைன் போட்டியாகும். இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் ஆவர்.

டீம் இண்டஸ் குழு...

டீம் இண்டஸ் குழு...

டீம் இண்டஸ் குழுவுக்கு இஸ்ரோ அதிகாரிகள் ஆலோசகர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
When the next batch of astronauts sets foot on the Moon, they may chance upon a cube with the names of three Indian and one US student etched on it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X