அம்மாடியோவ்.. கேன்சல் செய்யும் டிக்கெட்டில் ரயில்வே கல்லா கட்டிய தொகை எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : டிக்கெட் ரத்து செய்ததில் மட்டுமே கடந்த ஆண்டைவிட இந்தியன் ரயில்வே 25.29 சதவீதம் அதிக லாபம் பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தனி அதிகாரம் பெற்ற ரயில்வே தகவல் மையத்திடம் சந்திரசேகர் காட் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில விளக்கங்கள் கேட்டுள்ளார்.

அதற்கு சிஆர்ஐஎஸ் அளித்துள்ள பதிலில் 2015-16ம் ஆண்டில் டிக்கெட் ரத்து செய்வதால் ரூ. 1,123 கோடி வருமானம் ரயில்வேக்கு கிடைத்தது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருமானமானது 2016-17ஆம் ஆண்டில் இது ரூ.1,407 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2014-15ம் ஆண்டில் ரயில் டிக்கெட் ரத்து செய்யப்படுவதால் ரூ.93.8 கோடி வருமானம் கிடைத்ததாகவும் பயணிகள் முன்பதிவு முறையின் கீழ் உள்ள தகவல்கள் தரப்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர் காட் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

இதே போன்று முன்பதிவில்லா டிக்கெட் ரத்து செய்யப்படுவதன் மூலம் பெறும் வருமானம் 2016 - 17ம் ஆண்டில் ரூ. 17.87 கோடியாக இருக்கிறது. இதுவே 2015-16ம் நிதியாண்டில் ரூ. 17.23 கோடியாகவும், 2014-2015 நிதியாண்டில் ரூ.14.72 கோடியாகவும் இருந்துள்ளது.

விதியில் மாற்றம்

விதியில் மாற்றம்

கடந்த 2015ம் ஆண்டில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு ரயில்பயணிகள் அப்போதே கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆதாரம் தர மறுப்பு

ஆதாரம் தர மறுப்பு

டிக்கெட் ரத்து செய்யப்படுவதில் வேறு என்ன விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது என்ற ஆதாரங்களை வழங்க ரயில்வே நிர்வாகம் மறுத்துவிட்டதாக காட் கூறுகிறார். வர்த்தக நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என்பதால் முழு விவரங்களை தர மறுப்பதாகவும் அவர் கூறினார்.

தளர்த்துமா?

தளர்த்துமா?

எனினும் பயணிகளின் நலனில் அக்கறை செலுத்தி முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படும் போது வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் காட் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Indian Railways collected Rs 14.07 billion through cancellation of reserved tickets on the request of the commuters in FY 2016-17
Please Wait while comments are loading...