For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரர்கள் இவர்கள்தான்... கொஞ்சம் படிங்க பாஸ்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டாப் டென் பணக்காரர்கள் லிஸ்ட்டுகளை பார்த்து இருப்பீர்கள். ஆனால் இந்தியாவின் டாப்-5 பணக்கார பிச்சைக்கரர்கள் லிஸ்ட் பார்த்திருக்கிறீர்களா? பிச்சை எடுத்து கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். அவர்களை பட்டியலிட்டு டாப் 5 பிச்சைக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

பேரழகன் படத்தில் ஒரு பிச்சைக்காரர் கிரெடிட் கார்ட், டெபிட் கார்டு, செல்போன் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் என கலக்குவார். அதேபோல இந்த பட்டியலில் உள்ள பெக்கர்களும் சொந்த பிளாட்டுகள், வாடகைக்கட்டிடங்கள் மூலம் மாதம் பல ஆயிரம் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, என கலக்கும் பணக்கார மிஸ்டர் பெக்கர்களைப் பற்றி பற்றி படியுங்களேன்.

நம்பர் 1 பிச்சைக்காரர்

நம்பர் 1 பிச்சைக்காரர்

பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின். தற்போது 49 வயதாகும் ஜெயினுக்கு மும்பை பரேல் பகுதியில் 2 பிளாட்டுகள் சொந்தமாக இருக்கிறது. ஒரு பிளாட்டின் மதிப்பு 70 லட்ச ரூபாய். அதோடு சொந்தமாக ஜுஸ் கடையை வாடகைக்கு விட்டு அதில் இருந்து மாதம் 10 ஆயிரம் ரூபாயை வாடகையாக சம்பாதிக்கிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு 2 கோடிக்கும் மேல்.

சொந்த பிளாட்

இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கும் பிச்சைக்காரரும் மும்பையை சேர்ந்தவர்தான். இவரது பெயர் கிருஷ்ணகுமார் கீதே. இவரது தினசரி வருமானம் 2000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை வருகிறது. இவருக்கு மும்பை புறநகர் பகுதியான நாலாசோப்ராவில் சொந்த பிளாட் உண்டு. இங்குதான் இவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

தினசரி வருமானம் ரூ.2000

தினசரி வருமானம் ரூ.2000

சம்பாஜி காலே என்பவரும் மும்பையை சேர்ந்த பிச்சைக்காரர்தான். இவருக்கு தினசரி வருமானமாக ஆயிரம் கிடைக்கிறது. மும்பையில் விரார் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். 34 லட்சம் ரூபாய் சொத்து இருக்கிறது. இது தவிர ஷோலாப்பூர் மாவட்டத்தில் இரண்டு சொந்த வீடுகளும் உள்ளன. இவரது தினசரி வருமானம் ரூ. 1500 முதல் ரூ. 2000. இந்த தொழிலை மிக்க மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக தெரிவிக்கிறார் சம்பாஜி காலே.

ரயில்நிலைய பிச்சைக்காரர்

ரயில்நிலைய பிச்சைக்காரர்

இந்தியாவின் 4வது பணக்கார பிச்சைக்காரராக இருப்பவர் பாட்னாவை சேர்ந்த சர்வாதியா தேவி. பாட்னா நகர ரயில்களில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் பிச்சை எடுக்கத் தொடங்கினார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது மகளுக்கு ஜாம் ஜாம் என்று திருமணம் செய்து வைத்தார். இன்சூரன்ஸ் பாலிசிக்கு மட்டும் ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாயை பிரீமியமாக சர்வாதியா தேவி கட்டுகிறாராம்.

கிரெடிட் கார்டு பிச்சைக்காரர்

கிரெடிட் கார்டு பிச்சைக்காரர்

கொல்கத்தாவை சேர்ந்த லட்சுமி தாஸ் இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடிக்கிறார். கடந்த 1964ஆம் ஆண்டு தனது 16வது வயதில் பிச்சை எடுக்கத் தொடங்கிய லட்சுமி தாசுக்கு, வங்கி அக்கவுண்ட் உண்டு. போலியோவால் பாதிக்கப்பட்ட லட்சுமி தாஸ்,ஒரு சேஞ்சுக்காக பிச்சை எடுக்கத் தொடங்கினார். அதில் சேர்ந்த வருமானத்தை கொண்டு கொல்கத்தாவில் வங்கியில் கணக்கு தொடங்கினார். தற்போது 64 வயதான அவருக்கு வங்கி சார்பாக கிரெடிட் கார்டும் வழங்கப்பட்டுள்ளது.

English summary
Top 5 Richest or highest earning well settled beggars in india. as compared to statistics they are earning more than the average software engineer/ BPO/ CAll center employees monthly earnings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X