200 அடி பாலத்தில் இருந்து பறந்த லாரி.. தண்ணீர் லாரி மீது விழுந்து நொறுங்கியது.. வீடியோ வைரல்
ஜெய்ப்பூர்: டெல்லி - அஜ்மீர் விரைவு சாலை பாலத்தில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று 200 அடி பைபாஸில் இருந்து பறந்து வந்து கீழே சென்று கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி மீது விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் தொகை அதிகரித்து வரும் அதே வேளையில் போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல நேரங்களில் எதிர்பாராத விபத்துகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. விபத்துகளைத் தடுத்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவே போக்குவரத்து விதிகள் இருக்கின்றன.

ஆனாலும், பொதுமக்கள் பலரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. இது விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. அதிவேகமாக இயக்குவது ஓட்டுநருக்கு மட்டுமல்லாமல், எதிரே வருபவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேம்பாலங்களில் சில நேரங்களில் விபத்துக்கள் நடந்தால் பக்கவாட்டு சுவரை உடைத்துக் கொண்டு வாகனங்கள் கீழே விழும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
அந்த வகையில், டெல்லி - அஜ்மீர் விரைவு சாலையில் 200 அடி பைபாஸ் சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான பதைபதைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லி - அஜ்மீர் விரைவுப் பாலத்தில் லாரி ஒன்று அஜ்மீர் நோக்கி நேற்று மாலை 4.50 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஓட்டுநர் அதிவேகமாக இயக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், லாரி சாலையில் இருந்து விலகி எக்ஸ்பிரஸ் வே தடுப்புகளை உடைத்துக் கொண்டு கீழே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் மீது விழுந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பலத்த சப்தம் ஏற்பட்டுள்ளது. வெடி விபத்து ஏற்பட்டதாக நினைத்து பொதுமக்கள் பலரும் அச்சமடைந்தனர். விபத்து ஏற்பட்டதை அறிந்து சர்வீஸ் சாலையில் இருந்த கடைகளில் இருந்தவர்கள் ஓடிவந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தண்ணீர் லாரி டிரைவர் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியதாக போலீஸார் தெவித்துள்ளனர். விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கிரேன் மூலம் லாரி மற்றும் டேங்கர் லாரியை சாலையில் இருந்து அகற்றி சாலையோரத்தில் அப்புறப்படுத்தினர். இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
200 அடி பள்ளத்தில் இருந்து டிரக் லாரி பறந்து சென்று சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி மீது விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோல, கேரளாவில் பைக்கில் சென்ற இளம்பெண், அவரின் 3 வயது குழந்தை, சகோதரி உள்ளிட்ட மூவரும் தூக்கிவீசப்பட்டு மேம்பாலத்தின் கீழ் விழுந்த சம்பவம் கடந்த ஜூன் மாதத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம், வெள்ளார் பகுதியைச் சேர்ந்தவர் சிமி (35). இவர் தனது 3 வயது மகள் சிவன்யா, சகோதரியுடன் (32) ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவனந்தபுர தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெண்பாலவட்டம் மேம்பாலத்தில் ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மேம்பால சுவரில் ஸ்கூட்டர் மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications