Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உண்மை, அஹிம்சையின் அடையாளம் காசி... ஆன்மிக ஆன்மாவின் சின்னம் - மோடி பேச்சு

உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Subscribe to Oneindia Tamil

காசி: உண்மை மற்றும் அஹிம்சையின் அடையாளம் காசி என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இது நமது ஆன்மிக ஆன்மாவின் சின்னம் என்று கூறிய மோடி, காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் ஒரு பிரம்மாண்டமானது மட்டுமல்ல இந்தியாவின் சனாதன கலாசாரம் மற்றும் மரபுகளின் சின்னமாகும் என்று கூறியுள்ளார். இன்று இந்த நிகழ்வு வரலாற்றில் புதிய அத்தியாயமாக எழுதப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசினார். முன்னதாக வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிக்கு சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அங்கு ஆரத்தி எடுத்து கால பைரவர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து காரில் வாரணாசியின் வீதிகள் வழியாக பயணம் செய்த பிரதமர் மோடிக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, மக்கள் வழங்கிய சால்வைகள், தொப்பிகள் போன்றவற்றையும் ஏற்றுக் கொண்டார்.

காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம்

காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம்

பின்னர் கங்கையாற்றில் ஈரடுக்கு படகில் பயணித்த மோடி, கங்கையில் புனித நீராடினார்.உலகப்புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வருகை தந்த மோடி, புனித நதியான காசி நதியில் புனித நீராடி கங்கை நீரை எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். காசி விஸ்வாநாதருக்கு சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம் செய்து மோடி சிறப்பு வழிபாடு செய்தார்.

ஊழியர்களுடன் புகைப்படம்

ஊழியர்களுடன் புகைப்படம்

இதனையடுத்து காசி விஸ்வநாதர் ஆலய வளாக கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி பூ தூவி மரியாதை செலுத்தினார். காசி விஸ்வநாதர் ஆலய வளாக கட்டிட பணியில் ஈடுபட்ட பணியாளகளுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனையடுத்து காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

புதுப்பொலிவு பெற்ற காசி

புதுப்பொலிவு பெற்ற காசி

கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் கடந்த 2019, மார்ச் 8ம் தேதி ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டத்துக்காக 300 சிறுகடைகள் கையகப்படுத்தப்பட்டன. 1400 கடைக்காரர்களிடம் சுமூகமாகப் பேசி, இழப்பீடுகளை வழங்கி இடங்களைக் கைப்பற்றி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டிடங்கள்

புதிய கட்டிடங்கள்

கங்கை நதிக்கரையை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை 320 மீ நீளமும், 20 மீ அகலமும் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக தங்கும் அறைகள், அருங்காட்சியகம், பார்வையாளர் மாடம், சுற்றுலா மையம், உணவு கூடங்கள் என மொத்தம் 23 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
காசி விஸ்வநாதர் கோவிலின் நுழைவாயில் மற்றும் இதர கட்டுமானங்கள், பாரம்பரிய முறைப்படி கற்கள் மற்றும் இதர மூலப்பொருட்களை கொண்டு கட்டப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் இந்த கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களுக்கு நன்றி

தொழிலாளர்களுக்கு நன்றி

ஹர ஹர மகாதேவ் என்ற முழக்கத்துடன் பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார். இந்த மாபெரும் வளாகத்தை கட்டுவதற்கு உழைத்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கோவிட்19 காலத்திலும், பணிகள் பாதியில் நிற்கவில்லை. இது இப்படித்தான் இருக்கும் காசியை மாற்ற முடியாது என்ற எண்ணம் இருந்தது.

உணர்வுகளால் உருவாக்கப்பட்ட நகரம்

உணர்வுகளால் உருவாக்கப்பட்ட நகரம்

காசியின் வளர்ச்சியில் அனைவரது பங்கும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மோடியை போல் பலர் வருவார்கள், ஆனால் எதையும் மாற்ற முடியாது என்று எண்ணினர். பல மதத்தை சேர்ந்தவர்கள் காசிக்கு வந்து செல்கின்றனர். காசி இப்போது மீண்டும் புதிய ஒளி பெற்றுள்ளது என்றார்.
காசி உணர்வுகளால் உருவாக்கப்பட்டது. இங்கு வந்து பலரும் ஆசி பெற்றும் இந்த புண்ணியஸ்தலம் இந்தியாவின் அடையாளமாக திகழ்கிறது.

கலாச்சாரம்

கலாச்சாரம்

காணாமல் போன கோவில்கள் மீண்டும் இங்கு நிறுவப்பட்டன. இன்று இந்த நிகழ்வு வரலாற்றில் புதிய அத்தியாயமாக எழுதப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் ஒரு பிரமாண்டமானது மட்டுமல்ல, இந்தியாவின் சனாதன கலாசாரம் மற்றும் மரபுகளின் சின்னமாகும்.

50ஆயிரம் பக்தர்கள்

50ஆயிரம் பக்தர்கள்

பண்டைய காலத்தின் உத்வேகங்கள் எவ்வாறு எதிர்காலத்திற்கு வழிகாட்டுகின்றன என்பதை இங்கே காணலாம். காசி விஸ்வநாதர் கோவிலின் இருண்ட பக்கம் தற்போது முடிவடைந்துள்ளது. 3000 சதுர அடியில் இருந்த காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் தற்போது 5 லட்சம் சதுர அடியாக மாறியுள்ளது. இப்போது, ​​50000 முதல் 75000 பக்தர்கள் கோவிலுக்கும் அதன் வளாகத்திற்கும் வரலாம்.

உணர்வுப்பூர்வமான இடம்

உணர்வுப்பூர்வமான இடம்

காசி மிக புனிதமானது. இது மக்களின் மிக உணர்வுப்பூர்வ இடமாகும். இதனை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. காசி என்பது வார்த்தைகள் மட்டும் அல்ல காசி என்பது உணர்வுகளின் உருவாக்கம் என்ற மோடி காசி என்பது வாழ்க்கை..அதுதான் உண்மை பண்பாடு என்றார். காசியில் பல தியாகிகள் உருவாகி உள்ளனர். உண்மை, அஹிம்சையின் அடையாளம் காசி. இது நமது ஆன்மிக ஆன்மாவின் சின்னம் என்று குறிப்பிட்டார்.

புதுப்பொலிவு பெற்ற காசி

புதுப்பொலிவு பெற்ற காசி


இது இந்தியாவின் தொன்மை மற்றும் பாரம்பரியத்தின் சின்னம்.காசிக்கு பல மதத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். காசியில் அனைத்து தரப்பினரும் வந்து ஆசி பெற்று செல்கின்றனர். இங்குள்ள அனைவருக்கும் காசியின் வளர்ச்சியில் பங்கு உண்டு. வாரணாசியை பலர் கேலி செய்தனர். ஆனால் நோக்கம் சரியாக இருந்தால் முடியாதது எதுவும் இல்லை. இன்றைய புதிய அமைப்பு காசி விஸ்வநாதர் அருளால் நடந்தேறியுள்ளது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+