For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனுமன் பிறந்த ஊர் எது?.. திருமலை திருப்பதி தேவஸ்தான கருத்தால் சர்ச்சை!

Google Oneindia Tamil News

அமராவதி: அனுமன் பிறந்த ஊர் உள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அனுமன் கர்நாடகா மாநிலத்தின் ஹம்பி அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் அனுமன் திருமலையில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றில்தான் பிறந்ததாக ஒரு புத்தகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிட உள்ளது.

வரலாற்று கல்வியாளர்கள்

வரலாற்று கல்வியாளர்கள்

ஆதாரங்களின் அடிப்படையில் இப்புத்தகம் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆனால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த தகவலை தொல்பொருள் ஆய்வாளர்களும் வரலாற்று கல்வியாளர்களும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

அனுமன்

அனுமன்

ஹம்பி பகுதியில் அனுமன் பிறந்தார் என்பதற்கு புராண தகவல்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், கோயில் சிற்பங்கள் உள்ளிட்ட வடிவங்களில் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொகர்னா

கொகர்னா

இந்த நிலையில் கர்நாடக மாநிலமும் அனுமன் பிறந்த ஊர் ஹம்பி என உரிமை கோரி வருகிறது. கர்நாடகா மாநிலத்தின் ஷிவமோகாவைச் சேர்ந்த மதத் தலைவர் ஒருவர் உத்தர கர்நாடகா மாவட்டத்தில் உள்ள கொகர்னா எனுமிடத்தில் பிறந்ததாகவும் கூறுகிறார்.

கொப்பல் மாவட்டம்

கொப்பல் மாவட்டம்

இதற்கு முன்னர் கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள அனெகுண்டி எனும் இடத்துக்கு அருகில் கிஷ்கிந்தாவில் இருக்கும் அஞ்சனாத்ரியில்தான் அனுமன் பிறந்தார் எனக் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அனுமன் பிறந்த இடத்திற்கு இரு மாநிலங்கள் உரிமை கோரி வருவதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

English summary
Tirumala Tirupati Devasthanam says that Anjanatri is the birth place of Hanuman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X