For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி எப்படி அப்படி பேசலாம்.. டிவிட்டரில் அணி திரண்ட எதிர்ப்பாளர்கள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய நாட்டவர் தங்களை இந்தியர்கள் என்று சொல்ல வெட்கப்பட்டனர் என்றும், தற்போது பெருமைப்படுகின்றனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியதை கடுமையாக சாடி டிவிட்டரில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மோடி தற்போது பல்வேறு வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசுகையில், "முன்பெல்லாம் இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களைத்தான் பார்த்தேன். கடந்த ஓராண்டு முதல், இந்தியாவின் பிரதிநிதிகளாக தங்களை பெருமையுடன் பார்க்கும் இந்தியர்களை நான் வெளிநாட்டில் பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, கனடா நாட்டில் சுற்றுப் பயணம் செய்தபோது, முன்பு ஊழல் மிகுந்த இந்தியாவை பார்த்தீர்கள், தற்போது சுத்தமான இந்தியாவை பார்க்கிறீர்கள் என்று மோடி கூறியதை காங்கிரஸ் கண்டித்தது.

தற்போதும், பழைய ஆட்சியாளர்களை குறிப்பிட்டு மோடி மறைமுகமாக தாக்கியதை உணர்ந்த காங்கிரஸ் ஆதரவாளர்கள் டிவிட்டரில் #ModiInsultsIndia என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில், மோடியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

அது தற்போது தேசிய அளவில் டாப் டிரெண்டாக இருந்து வருகிறது.

English summary
Prime Minster Narendra Modi’s remarks in China and South Korea about Indians being ashamed of being born in the country before his government came to power triggered one of Twitter’s top trends.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X