2 நாளில் 2 பலி! தீவிரமாகும் குரங்கு அம்மை! மேற்கத்திய நாடுகளில் உச்சகட்ட அலர்ட்! கண்காணிப்பு தீவிரம்
மாட்ரிட் : உலக நாடுகளில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து இரண்டு பேர் பலியாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மேற்கத்திய நாடுகளில் உச்சகட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே உலுக்கி போட்ட கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல உலக நாடுகள் பொருளாதார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் மீண்டெழுந்து வரும் நிலையில் மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை தற்போது உலகின் பல நாடுகளில் மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் ஸ்வீடன் ஸ்பெயின் போர்ச்சுகல் நெதர்லாந்து இத்தாலி ஜெர்மனி பிரான்ச் பெல்ஜியம் என பல நாடுகளில் பாதிப்பு திடீரென அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் சிலருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை
கொரோனா போலவே பல நாடுகளில் குரங்கு அம்மைக்கென தனி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இது ஒரு சுகாதார பேரழிவாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது தற்போது பிரான்ஸ் அமெரிக்க உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் அரசுகளும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை அபாயகரமானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள் நிலையில் எப்படி பரவுகிறது என்ற முறையான தகவல்கள் இல்லை.

எப்படி பரவுகிறது
அணில்கள், குரங்குகள் போன்ற கொறித்துண்ணிகள், வேட்டையாடப்படும் விலங்குகள், மருத்துவ கழிவுகள் மற்றும் நேரடி தொடர்பு ஆகியவை மூலம் குரங்கு அம்மை பரவும் என்றாலும் ஓரினச்சேர்க்கை மற்றும் உடலுறவு மூலமாக பரவுவதாகவும் தகவல்கள் இருக்கிறது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டுப் பயண வரலாறு இல்லாத நபர்களிடமும் குரங்கு அம்மை பாதிப்பு மற்றும் அறிகுறிகள் இருப்பது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதல் பலி
தற்போது வரை குரங்கு அம்மை காரணமாக யாரும் உயிழக்கவில்லை என கூறப்பட்டிருந்தாலும் ஆப்பிரிக்காவில் இதற்கு முன்னதாக ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில்தான் ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதன்முறையாக தெற்கு பிரேசில் நாட்டில் 41 வயதான ஆண் ஒருவர் குரங்கு காய்ச்சல் காரணமாக பலியானார். இதனால் ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயர்ந்த நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான நோய் எதிர்ப்பு பிரச்சனைகள் அவருக்கு இருந்ததால் பலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து பலி
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டிலும் குரங்கு அம்மை நோய் காரணமாக ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கிறார். குரங்கு அம்மை காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் இருக்கும் நிலையில்தான் குரங்கு அம்மை பாதிப்புக்கு இரண்டாவதாக ஒருவர் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை இது இரண்டாவது உயிரிழப்பு ஆகும். அவரது அடையாளங்கள் வெளியிடப்படாத நிலையில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு அவருக்கு இருந்ததாகவும் இதன் காரணமாகவும் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது ஸ்பெயின் நாட்டில் மற்றும் சுமார் 4000 பேர் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications