சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த உ.பி எடுத்த அதிரடி நடவடிக்கை! யோகி முயற்சிக்கு குவியும் பாராட்டு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த 57 மாவட்டங்களில் சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உத்தரப் பிரதேசம் தேசிய அளவில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றங்களுக்கு இடையூறாக குற்ற சம்பவங்கள் இருக்கின்றன. அதிலும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது உ.பி முழுவதும் சுமார் 18 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் காவல் நிலையங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த பரிந்துரை முன்வைக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், புதியதாக 57 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அமைவதற்கு ஒப்புதல் அளித்து ரூ.127 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறார். எனவே விரைவில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இது மாநிலம் முழுவதும் சைபர் குற்றங்களை கணிசமாக கட்டுப்படுத்தும். அதேபோ சைபர் கிரைம் குற்றங்களில் உ.பியின் தண்டனை விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது.
அதாவது தேசிய அளவில் சைபர் கிரைம் குற்றங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை விகிதம் 46.5. ஆனால் உ.பியில் இது 87.8 சதவிகிதமாக இருக்கிறது. மாநிலம் முழுவதும் 838 பேர் சைபர் கிரைம் தொடர்பாக தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தை அனைத்து துறைகளிலும் முன்னணிபடுத்துவதான் எங்கள் நோக்கம். இதற்காகதான் நாங்கள் உழைத்து வருகிறோம். விரைவில் தேசிய அளவில் உ.பி பெரிய வளர்ச்சியை எட்டும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications