நுபுர்சர்மா சர்ச்சையால் உபியில் வன்முறை! சொத்துகளை சூறையாடியவர்களிடம் இழப்பீடு! போலீஸ் அதிரடி
ராஞ்சி: உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 6 இடங்களில் வன்முறை நடந்தது. இதுதொடர்பாக 227 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார், பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து அதற்கான இழப்பீடு வசூலிக்கப்பட உள்ளது.
இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதத்தில் சர்ச்சையாக பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் மட்டுமின்றி, கத்தார், சவுதி அரேபியா உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பு கிளம்பின.

நாடு முழுவதும் வெடித்த போராட்டம்
இந்நிலையில் நேற்று இந்தியாவின் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அவர்கள் நுபுர் சர்மாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிக்காட்டினர். ராஞ்சியில் நடந்த போராட்டம் வன்முறையானது. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சிறுவன் உள்பட 2 முஸ்லிம்கள் இறந்தனர்.

உபியில் 6 இடங்களில் போராட்டம்
மேலும் உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். உத்தர பிரதேச மாநிலம் சாரன்பூர், பிரக்யராஜ், ஹத்ராஸ், மொரடாபாத், அம்பேத்கர் நகர், பெரோடாபாத்தில் பகுதிகளில் பேராட்டம் வன்முறையானது. கல்வீச்சு நடத்தப்பட்டது. மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

227 பேர் கைது
இந்த வேளையில் போலீஸ்காரர்களும் காயமடைந்தனர். இந்நிலையில் வன்முறை தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 227 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சாரன்பூரில் 48 பேர், பிரக்யராஜில் 68 பேர், ஹத்ராஸில் 50 பேர், மொரடாபாத்தில் 25 பேர், பெரோடாபாத்தில் 8 பேர், அம்பேத்கர் நகரில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வன்முறையின் காரணமாக பதற்றமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Recommended Video

கட்டுக்குள் நிலைமை...
இந்நிலையில் வன்முறை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் போலீசார் நடவடிக்கையை துவங்கி உள்ளனர். இதுபற்றி உத்தர பிரதேச உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவானிஷ் அவாஸ்தி கூறுகையில், ‛‛மாநிலத்தில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. மொத்தம் 227 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.

கடும் நடவடிக்கை; இழப்பீடு
இதுபற்றி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரசாந்த் கூறுகையில், ‛‛மாநிலத்தில் 6 மாவட்டங்களில் பிரச்சனையை ஏற்படுத்தியவர்கள் என மொத்தம் 227 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது. தனியார் மற்றும் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து அதற்கான இழப்பீடு வசூலிக்கப்பட உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications