For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் அம்பரீஷ் உள்பட 14 அமைச்சர்கள் நீக்கம்..பேருந்துக்கு தீ வைப்பு..கர்நாடகாவில் பதற்றம் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது அமைச்சரவையில் இடம் பெற்ற நடிகர் அம்பரீஷ் உள்பட 14 அமைச்சர்களை அதிரடியாக நீக்கியுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர்களின் ஆதரவாளர்கள் பேருந்துக்கு தீ வைத்து எரித்து பயங்கர வன்முறையில் ஈடுபட்டதால் கர்நாடகாவில் பெரும் பதற்றம் நிலவியது.

கர்நாடக சட்டசபைக்கு 2018-ம் ஆண்டு தேர்தல் நடை பெறுகிறது. இதனால் பாஜக மேலிடம் எடியூரப்பாவை கர்நாடக மாநில பாஜக தலைவராக நியமித்து, கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்துவருகிறது.

violent protests across Karnataka

இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சியும் அடுத்த தேர்தலிலும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதன் தொடக்கமாக ஆட்சியிலும் கட்சியிலும் பல அதிரடி மாற்றங்களை செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி சரியாக செயல்படாதவர்கள், சர்ச்சையில் சிக்கியவர்கள், ஊழல் புகாரில் சிக்கியவர்களை மாற்ற சித்தராமையா முடிவு செய்தார். இதன்படி காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஒப்புதல் படி சபாநாயகர் திம்மப்பா உள்ளிட்ட 14 பேர் நீக்கப்பட்டனர். புதிதாக 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் நீக்கப்பட்ட அமைச்சர்களின் ஆதரவாளர்கள் சித்தராமையாவின் உருவமொம்மையை எரித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குல்பர்கா, பெங்களூரு, உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை எரித்தும் பயங்கர வன்முறையில் ஈடுபட்டதால் கர்நாடகாவில் பெரும் பதற்றம் நிலவியது.

கல புரகி என்ற இடத்தில் பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் கம்ரூன் இஸ்லாம் ஆதரவாளர்கள் அருசு பேருந்து்க்கு தீ வைத்து எரித்தனர். மேலும் மாண்டியா அருகே பெங்களூரு - மைசூரு சாலையில் திரண்ட நடிகர் அம்பரீஷ் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

English summary
Supporters of dropped Ministers and ministerial aspirants have unleashed violent protests in different parts of Karnataka
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X