எம்எல்ஏக்களுக்கு மிரட்டல்.. ஊழலை துடைப்பதாக கூறிய மோடி, ஜனநாயகத்தை துடைத்தெறிகிறார்: குமாரசாமி கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பாஜக-ஜனநாயகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டது-குமாரசாமி, ராகுல் காந்தி- வீடியோ

  பெங்களூர்: ஊழலை துடைப்பேன் என்று கூறிய மோடி ஜனநாயகத்தை துடைத்தெறிகிறார் என்று மஜத தலைவர் எச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டினார்.

  எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற நிலையில், பெங்களூரில் குமாரசாமி பேட்டியளித்தார். அவர் கோபத்துடன் காணப்பட்டார்.

  We have to come together to protect interests of the country, says HD Kumaraswamy

  குமாரசாமி கூறியதாவது: ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு எதிராக முடிவெடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க, நாலைந்து நாட்கள் தராமல், 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கதானே?

  காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜக மிரட்டி பணிய வைக்க முயல்கிறது. மத்திய அரசின் அமலாக்கத்துறை உள்ளிட்ட ஏஜென்சிகள் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. காங்கிரசின் ஆனந்த்சிங் மிரட்டி வைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜக மிரட்டி பணிய வைக்க முயல்கிறது. அனைத்து மாநில கட்சிகளும் இந்த ஜனநாயக படுகொலைக்கு எதிராக திரள வேண்டும். இதுபோன்ற ஜனநாயக படுகொலைக்கு எதிராக, மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்.

  மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களின் கட்சிகளுடனும் இதுகுறித்து விவாதிக்க எனது தந்தை தேவகவுடா முயற்சி மேற்கொள்வார். அனைத்து தரப்புமே இணைந்து நாட்டு நலனுக்காக போராட வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  I will request my father (HD Deve Gowda) to take the lead & talk to all regional parties & see how BJP is destroying democratic systems, we have to come together to protect interests of the country, says JD(S)'s HD Kumaraswamy .

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற