நேருக்கு நேர் வந்த விமானங்கள்.. நூலிழையில் உயிர் பிழைத்தேன்.. மம்தா பானர்ஜி உருக்கம்.. பரபர பின்னணி!
கொல்கத்தா : மேற்கு வங்க மாநில முதலமைச்சரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி உத்திர பிரதேசத்தில் இருந்து கொல்கத்தா திரும்பிய போது விமான விபத்தில் சிக்க இருந்ததாகவும் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக கூறியுள்ளார்.
Recommended Video
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்திரபிரதேசம் சென்றிருந்தார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
உபியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை முடித்துவிட்டு கொல்கத்தாவுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமானத்தில் திரும்பினார்

மம்தா பானர்ஜி
கொல்கத்தா நோக்கி நடுவானில் விமானம் சென்று கொண்டு இருந்தபோது அவர் பயணம் செய்த விமானம் கடுமையாக குலுங்கி அதிர்ந்தது. இதன் காரணமாக பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு உள்காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நடுவானில் விமானம் குலுங்கி விபத்துக்குள்ளாக இருந்த நிலையில் விமானத்தின் விமானி மிக சாதுரியமாக அந்த விமானத்தை தொடர்ந்து இயக்கினார்.

விமான விபத்து?
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் எந்தவித ஆபத்துமின்றி விமானத்தை தரை இறக்கினார். இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்துக்கு மேற்குவங்க அரசு கடிதம் எழுதியது. அதில் விமானம் சென்ற பாதையில் மற்றொரு விமானம் வந்தது குறித்தும், விமானம் குலுங்கியதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக விளக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

மம்தா விளக்கம்
இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் அன்று என்ன நடந்தது என்பது குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் தான் பயணம் செய்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எதிரே மற்றொரு விமானம் நேருக்கு நேராக திடீரென வந்ததாகவும், சில வினாடிகள் அந்த விமானம் இதே போல் பறந்து இருந்தால் தான் பயணம் செய்த விமானமும் எதிரே வந்த விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கும் என்றார்.

உள் காயம்
மேலும் தான் பயணம் செய்த விமானத்தை இயக்கிய விமானி தனது புத்தி கூர்மையால் விமானத்தை மாற்று வழியில் இயக்கியதால் தான் உயிர் பிழைத்ததாகவும், விமானம் சுமார் 6000 அடி கீழே இறங்கிய நிலையில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். தனக்கு இன்னும் வலி உள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து துறை மற்றும் மத்திய அரசிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை என்று மம்தா கூறியுள்ளார்.
-
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications