For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

90's கிட்ஸ்- பெண்ணே கிடைக்காம தவிக்கிறாங்க.. பயபுள்ள போட்டிருக்குற விளரம்பரத்தை பாருங்க!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: 90களில் பிறந்த பல ஆண்கள் இங்கே பெண் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் ஒருவர் தனக்கு பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் உள்பட எந்த சமூக ஊடகத்திற்கு அடிமையாகாத பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளார்.

இந்த விளம்பரத்தை பார்த்து கொதித்த பல ஆண்கள், இப்படி ஒரு பெண் தேடினா, இந்த ஜென்மத்தில் உங்களுக்கு கல்யாணமே ஆகாது என்று சாபம் விட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தின் கமர்புகூரைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்ட திருமண விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

சாத்தியமில்லை

சாத்தியமில்லை

இந்த விளம்பரத்தில் அப்படி என்ன சிறப்பு என்றால், அவருக்கு , "சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாத" மணப்பெண் வேண்டுமாம். தற்போதைய காலங்களில் இப்படி ஒரு பெண் கிடைப்பது சாத்தியம் இல்லை என்று அவருக்கு பலர் சமூகவலைதளத்தில் பதில் அளித்து வருகினறனர்.

திருமண அளவுகோல்

நிதின் சங்வான், ஐ.ஏ.எஸ்., விளம்பரத்தின் செய்தித்தாள் பேப்பர் கட்டிங்கை பகிர்ந்து அதை ட்விட்டரில் தலைப்பிட்டு, "வருங்கால மணமகள் / மணமகன்களே, தயவுசெய்து கவனம் செலுத்துங்கள். திருமணம் செய்வதற்கான போட்டி அளவுகோல்கள் மாறி வருகின்றன. " என்று பதிவிட்டுள்ளார்.

யார் அவர்

யார் அவர்

அந்த பேப்பர் விளம்பரத்தில் மணமகன் வைத்த கோரிக்கை என்ன? பேப்பரில் உள்ளபடி பார்ப்போம், "சாட்டர்ஜி 37/5'7" யோகா பயிற்சியாளர், அழகானவர், நியாயமானவர், எதற்கும் அடிமையாகாதவர், உயர் நீதிமன்றத்தில் வக்கீல் மற்றும் ஆராய்ச்சியாளர். அவரிடம் கார் உள்ளது, பெற்றோர் உள்ளனர். கமர்புகூரில் கிராம வீடு உள்ளது, எதையும பெண்ணிடம் எதிர்பார்க்கவில்லை இல்லை, மணமகள் நியாயமான, அழகான, உயரமான, ஒல்லியானவராக இருகக வேண்டும். முக்கியமாக மணமகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது. " இவ்வாறு கூறியுள்ளார்.

சாத்தியமில்லை

சாத்தியமில்லை

நிதின் சாங்வானின் ட்விட்டர் பதிவை கிட்டத்தட்ட 1,000க்கும் மேற்பட்டோர் லைக்குகள் செய்துள்ளனர். பலர் ரீ ட்வீட் செய்துள்ளனர்.. இதை பார்த்து பலரும் இப்படி ஒரு குணாதிசயங்களைக் கொண்ட பெண்ணை தேடி கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று கூறியுள்ளனர்.

பெண் கிடைக்காது

பெண் கிடைக்காது

இன்னும் சிலர் இந்த ஜென்மத்தில் அவருக்கு பெண் கிடைக்காது. கடைசி வரை பேச்சுலராகத்தான் இருக்க போகிறார் எனறு கூறினர். அதிலும் சிலர் இப்படியெல்லாமா கண்டிசன் போடுவார்கள் என்று ஆச்சரயமாக கேட்டுள்ளனர். 90களில் பிறந்த பல ஆண்கள் இன்னமும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். கல்யாணம் நடக்க பெண் கிடைத்தால் போதும் என்கிற நிலை இருக்கும் போது இப்படி ஒரு விளம்பரம் வந்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
A man from West Bengal is looking for a bride who is not addicted to social media. His matrimonial ad has gone viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X