ஜிஎஸ்டியால் விலை குறைந்த பொருட்கள் என்னென்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜுலை 1-ஆம் தேதி முதல் விலை குறைந்துள்ள பொருள்களின் விவரங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி கடந்த ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவில் அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பால் எந்தெந்த பொருள்களின் விலை உயரும் என்பது அலசி ஆராயப்பட்டுவிட்டது.

What are the things which are cheaper after gst?

ஆனால் ஜிஎஸ்டியால் விலை குறைந்த பொருள்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இவை சரிதானா என்பதை கடந்த மாதம் வாங்கிய பொருள்களின் ரசீதுடன் ஒப்பிட்டால் தெரிந்து விடும்.

ஜிஎஸ்டியால் விலை குறைந்த பொருள்களில் முதலில் உணவு பொருள்கள்: பால் பவுடர், தயிர், மோர், இயற்கை தேன், சீஸ், மசாலா பொருள்கள், தேயிலை பொருள்கள், கோதுமை, அரிசி, மாவு, கடலை எண்ணெய், பாமாயில் உள்ளிட்ட பொருள்களாகும்.

தினந்தோறும் பயன்படுத்தும் பொருள்கள்: குளியல் சோப்பு, தலைக்கு பூசும் எண்ணெய், துணி சோப்பு பவுடர், சோப், டிஸ்யூ பேப்பர், நாப்கின், தீப்பெட்டிகள், மெழுகுவத்திகள், கரி, மண்ணெண்ணெய், வீட்டு சமையல் எரிவாயு, ஸ்பூன்கள், கரன்டிகள், ஃபோர்க் ஸ்பூன்கள், கடையும் பொருள்கள், கேக் சர்வர்கள், மீன் வெட்டும் கத்திகள், இடுக்கிகள், ஊதுவத்தி, பல்துலக்கும் பேஸ்ட், பல்பொடி, காஜல், எல்பிஜி ஸ்டவ், பிளாஸ்டிக் தார்பாய்கள்.

ஸ்டேஷனரி பொருள்கள் : நோட்டுபுத்தகங்கள், பேனாக்கள், அனைத்துவிதமான பேப்பர்கள், கிராஃப் பேப்பர், பள்ளி பை, பயிற்சி புத்தகங்கள், படம் வரைதல், கலரிங் புத்தகங்கள், பேக்கரியில் பயன்படுத்தும் பார்ச்மென்ட் பேப்பர்கள், கார்பன் பேப்பர், பிரிண்டர்கள்.

மருத்துவ பொருள்கள்: இன்சுலின், மருத்துவ பயன்பாட்டுக்கான எக்ஸ் கதிர் பிலிம்கள், பரிசோதனை பொருள்கள், கண்ணாடிகள், புற்றுநோய், நீரிழிவு நோய்களுக்கான மருந்துகள்.

துணி வகைகள்: பட்டு, உல்லன் வகைகள், காதி துணிகள், காந்தி மேலாடைகள், ரூ.500-க்கு குறைவான காலணிகள், ரூ.1000-த்துக்குள்பட்ட துணிகள்.

மற்ற பொருள்கள்: 15 ஹெச்பி-க்கு மிகாத டீசல் என்ஜின்கள், டிராக்டர் டயர் மற்றும் டியூப்புகள், எடை பார்க்கும் இயந்திரங்கள், யூபிஎஸ், மின் மாற்றி, வைண்டிங் வயர்கள், ஹெல்மெட், பட்டாசுகள், லூப்ரிகென்ட், பைக்குகள், ரூ.100-க்கு குறைவாக உள்ள சினிமா டிக்கெட்கள், சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், எக்கானாமி வகுப்பு விமான டிக்கெட்டுகள், சிமென்ட், செங்கல்கள், ஹாலோ கற்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The things which are cheaper after GSt implemented. What are they, Here are the list.
Please Wait while comments are loading...