For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெருக்கடி நிலை பற்றி இந்திரா ராஜீவ் காந்தியிடன் என்ன கூறினார்?: சோனியா காந்தி பேட்டி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: நெருக்கடி நிலை குறித்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது மகன் ராஜீவ் காந்தியிடம் என்ன தெரிவித்தார் என்ற விவரத்தை கூற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்துவிட்டார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2006ம் ஆண்டு என்.டி.டி.வியில் மூத்த பத்திரிக்கையாளர் சேகர் குப்தாவின் வாக் த டாக் நிகழ்ச்சியில் அளித்த பேட்டி விவரம் இது:

What Indira said to Rajiv and me about Emergency: Sonia Gandhi

நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி தேர்தல் அறிவித்தது தான் செய்த தவறு என்று இந்திரா காந்தி நினைத்தார். தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு நெருக்கடி நிலை குறித்து அவர் கவலைப்பட்டார்.

நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது சரி இல்லை என இந்திரா தெரிவித்தார். எந்த ஒரு அரசும் இதை செய்யக் கூடாது என்ற பாடத்தை நெருக்கடி நிலை கற்றுக் கொடுத்தது. நெருக்கடி நிலை குறித்து ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி இடையே பேச்சு நடந்தது. இது தொடர்பாக ராஜீவும், அவரது சகோதரரும் கலந்துரையாடினார்கள். ஆனால் அதன் விவரத்தை தெரிவிக்க நான் விரும்பவில்லை.

நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இந்திரா, ராஜீவ் பேசியதன் விவரத்தை தெரிவிக்க நான் விரும்பவில்லை. இன்னும் 25 ஆண்டுகள் கழித்து அல்லது வேறு எப்பொழுதாவது அந்த விவரங்களை கூறுகிறேன் என்றார்.

2006ம் ஆண்டு என்.டி.டி.வியின் வாக் த டாக் நிகழ்ச்சிக்காக மூத்த பத்திரிக்கையாளருக்கு சோனியா அளித்த பேட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress president Sonia Gandhi remembers what her mother-in law Indira Gandhi told her and Rajiv Gandhi about the emergency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X