For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"2 மாசம் டைம் தாங்க.." பேசிக்கொண்டே இருக்கும் போது திடீரென கெஜ்ரிவால் செய்த சம்பவம்! பிளான் என்ன

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குத் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் வரும் டிச. 1 மற்றும் 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு இப்போது ஆட்சியிலுள்ள பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

இடையில் குஜராத்தில் இப்போது ஆம் ஆத்மியும் களமிறங்கி உள்ளது. பஞ்சாபைப் போலவே மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி தர வேண்டும் என்ற முனைப்புடன் ஆம் ஆத்மி அங்குக் களமிறங்கியுள்ளது.

 புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு.. பதவி பெற்ற மந்திரிகளின் மகன்கள்! புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு.. பதவி பெற்ற மந்திரிகளின் மகன்கள்!

குஜராத்

குஜராத்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர்கள் குறித்துப் பல சர்ச்சை தகவல்கள் வெளியாகி வரும் சூழலிலும் அது குறித்துக் கவலைப்படாமல் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார். இதற்கிடையே குஜராத் தேர்தலுக்குப் பின்னர், நிச்சயம் ஆம் ஆத்மி கட்சி தான் 100% ஆட்சிக்கு வரும் என்று கூறிய அவர், அதைச் சிறிய துண்டு சீட்டிலும் இதை எழுதி செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

மேலும், குஜராத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். சூரத்தில் செய்தியாளரிடம் பேசிய கெஜ்ரிவால், "டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தல்களில் எனது கணிப்புகள் 100% உண்மையாக இருந்தது. இப்போது குஜராத்திலும் கூட அதுவே தான் நடக்கும். குஜராத் மக்கள் ஆளும் பாஜகவைக் கண்டு அஞ்சுகிறார்கள். இதன் காரணமாகவே ஆம் ஆத்மியை ஆதரிப்பதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள்.

நிவாரணம்

நிவாரணம்

நான் எழுதி தரேன். குஜராத்தில் அடுத்து ஆம் ஆத்மி தான் ஆட்சிக்கு வரும். இதைக் குறித்துக் கொள்ளுங்கள். தேர்தலுக்குப் பின் இது தான் நடக்கும். 27 ஆண்டுக்கால தவறான நிர்வாகத்திற்குப் பிறகு, குஜராத் மக்களுக்குக் கடைசியாக நிவாரணம் கிடைக்க உள்ளது. குஜராத் அரசு ஊழியர்களும் ஆம் ஆத்மி அரசு அமைக்க உதவ வேண்டும். அரசு ஊழியர்களின் நலனுக்கு எதிராக அவர்கள் புதிய ஓய்வூதியத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை.

எழுதி தரேன்

எழுதி தரேன்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அடுத்தாண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம். நான் வெறும் பேச்சுக்குச் சொல்லவில்லை. பஞ்சாபில் இதற்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். குஜராத்தில் ஒப்பந்த ஊழியர்கள், காவலர்கள், அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் நிரந்தரப் பணி, ஊதிய உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதை அனைத்தையும் நாங்கள் தீர்த்து வைப்போம்.

அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள்

தேர்தலில் எந்தவொரு கட்சி வெற்றிபெறவும் அரசு ஊழியர்களின் ஆதரவு முக்கியம் தேவை. எனவே அனைவரும் தங்கள் ஒவ்வொரு வாக்குகளையும் ஆம் ஆத்மி கட்சிக்குத் தபால் மூலம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் தான் அடுத்து வரும் நாட்களில் ஆம் ஆத்மி கட்சி குறித்து உங்கள் அக்கம் பக்கத்தினரிடம் கூறி அவர்களை வாக்களிக்கச் செய்ய வேண்டும். 27 ஆண்டுகளில் குஜராத்தில் பாஜக இந்தளவுக்குத் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை.

காங்கிரஸ் ரேஸில் இல்லை

காங்கிரஸ் ரேஸில் இல்லை

மக்களிடம் சென்று யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேளுங்கள். ஆம் ஆத்மி அல்லது பாஜக என்று தான் மக்கள் சொல்வார்கள். பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று கூறுபவர்கள் கூட ஐந்து நிமிடங்களில் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்போம் என்பார்கள். நாங்கள் பல தேர்தல்களில் போட்டியுள்ளோம். ஆனால், குஜராத்தில் மட்டும் தான் மக்கள் யாருக்காக வாக்களிப்போம் என்பதை வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறார்கள். இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிப்பது உறுதி. குஜராத்தில் காங்கிரஸ் போட்டியிலேயே இல்லை" என்றார்.

English summary
Delhi Chief Minister Arvind Kejriwal says AAP will form government in Gujarat: Arvind Kejriwal makes election prediction in Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X