இந்த "பேடிங்டனை" விட்டு தினகரன் எம்.எல்.ஏக்கள் அகலாமல் இருக்க என்ன காரணம் தெரியுமோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கூர்க் : அதிமுக எம்எல்ஏவானதால் விதவிதமான ரிசார்ட்டுகளில் தங்கும் வசதியை அனுபவித்து வரும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தற்போது தங்கியுள்ள பேடிங்டன் விடுதியில் இல்லாத வசதிகளே இல்லை எனலாம்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தில் கூர்க் பகுதியில் அமைந்துள்ளது பேடிங்டன் ரிசார்ட்ஸ் மற்றும் ஸ்பா. சோமவார்பேட்டையில் உள்ள தொண்டூர் கிராமத்தில் குஷால் நகர், மடிகேரி மலைப் பகுதிக்கு இடையில் அமைந்துள்ளது இந்த ரிசார்ட்.

பரபரப்பான வாழ்க்கை முறையை மறந்து இயற்கையின் மடியில் இளைப்பாற நினைப்பவர்களுக்கு இந்த இடம் சொர்க்கம். அப்படி மலையும், மரமும் சூழ மிக ரம்மியமாக அமைக்கப்பட்டுள்ள விடுதியில் தான் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .

மலையும் மலை சார்ந்த இடம்

மலையும் மலை சார்ந்த இடம்

புதுச்சேரி தி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் கடலும் கடல் சார்ந்த நெய்தல் பகுதியில் தங்கியிருந்த எம்எல்ஏக்கள், பேடிங்டன் ரிசார்ட்டில் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பகுதியில் தங்கியுள்ளனர். விடுதிக்குள் நீச்சல் குளம், ஸ்பா, மல்ட்டி குசைன் டைனிங் வசதி என பிரம்மாண்டம் தூள் பறக்கிறது.

சிறப்பு விளையாட்டுகள்

சிறப்பு விளையாட்டுகள்

இது மட்டுமின்றி விடுதிக்குள் விளையாட்டு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. சைக்கிளிங், துப்பாக்கிச் கூடுதல், ஆர்கெரி, கயிறு ஏறுதல் என்று த்ரில்லிங் விளையாட்டுகளும் உள்ளுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி ரிசார்ட்டிலேயே வாலிபால் விளையாடியும், ஊஞ்சலாடியும் பொழுதை கழித்தவர்களுக்கு இங்கு செம ஜாலிதான்.

மிஸ்ஸிங்

மிஸ்ஸிங்

ஆனால் என்ன ஒரே ஒரு குறை புதுச்சேரியில் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருந்ததை மக்களும் பார்த்து ரசிக்க முடிந்தது. அவர்கள் ஜாலியாக என்ஜாய் செய்வதையும் பார்க்க முடிந்தது, ஆனால் பேடிங்டன் ரிசார்ட்டில் அந்த வசதி இல்லை.

அது தான் தினகரன் திட்டம்

அது தான் தினகரன் திட்டம்

எம்எல்ஏக்கள் பத்திரிக்கைகளை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே சிறப்பாக கேட்டட் கம்யூனிட்டியுடன் இந்த ரிசார்ட்டை தினகரன் தேர்ந்தெடுத்ததாகவும் தெரிகிறது. அதிமுக பொதுக்குழு கூடி தீர்மானம் போட்ட நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்காமல் ரிசார்ட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர் எம்எல்ஏக்கள்.

வாடகையே இவ்வளவா?

இந்த பேடிங்டன் ரிசார்ட் எல்லா வசதிகளும் கொண்டுள்ளது போல காஸ்ட்லியான ரிசார்ட் என்றும் சொல்லப்படுகிறது. மலைகளால் சூழப்பட்ட இந்த ரிசார்ட்டில் ஒருநாள் வாடகை மட்டுமே வரி இல்லாமல் ரூ. 13,500. வரியோடு சேர்த்தால் 17 ஆயிரம் ரூபாய் வரும். இதில்தான் 19 பேருக்கும் தனித்தனி காட்டேஜ்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Paddington Resorts & Spa is a highly getaway situated between Kushal Nagar and Madikeri hill station and at this resort only TTV. Dinakaran MLAs staying.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற