For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எத்தனை புத்தகம் போட்டாலும் மன்மோகன்ஜி வாயை திறந்து பதில் சொல்லிவிடுவாரா என்ன?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை விமர்சித்து எத்தனை புத்தகங்கள் வெளிவந்தாலும் அதுபற்றியெல்லாம் வாயே திறக்கமாட்டார் போல.. இப்போது முன்னாள் சி.ஏ.ஜி. வினோத் ராய் மன்மோகனை மாட்டிவிடும் புத்தகத்தை வெளியிடப் போகிறார்.

மன்மோகன்சிங்கின் ஆட்சிக் காலத்தில் ஊடக செயலராக இருந்த சஞ்சய் பாரூ, நிலக்கரித் துறை செயலராக பி.சி. பரேக் ஆகியோர் 2 புத்தகங்களை எழுதியிருந்தனர்.

What Vinod Rai, Sanjaya Baru and PC Parakh said about Manmohan Singh

இந்த புத்தகங்களில் மன்மோகன்சிங் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த விமர்சனங்கள் மன்மோகன்சிங்கை பாடாய்படுத்திவிட்டது.

மன்மோகன்சிங்கின் ஊடகச் செயலராக இருந்த சஞ்சய் பாரு 'சந்தர்ப்பவசமாக வந்த பிரதமர்' என்ற புத்தகத்தில் கூறியிருந்தது:

  • அதிகாரமற்றவராக இருந்தவர் மன்மோகன்சிங். அரசைக் கட்டுப்படுத்தும் சக்தி அவருக்கு இருந்தது இல்லை.
  • பிரதமர் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசின் கோப்புகளை சோனியா காந்தி பார்வையிட்டார்.
  • அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு, அதிகாரிகள் இடமாற்றம் போன்ற முக்கிய முடிவுகளை சோனியா காந்தியே எடுத்தார்.
  • சோனியா காந்திக்கும், மன்மோகன்சிங்குக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன.
  • பி.சி. பரேக் எழுதிய "சிலுவை சுமந்தவரா, சதிகாரரா? நிலக்கரி சுரங்க ஊழலும், பிற உண்மைகளும்" புத்தகத்தில் இடம்பெற்றவை:
  • பிரதமர் மன்மோகன் சிங் ஒருவேளை பதவியை ராஜினாமா செய்திருந்தால் நாட்டுக்கு நல்ல பிரதமர் கிடைத்திருப்பாரா என்று எனக்குத் தெரியாது.
  • மன்மோகன்சிங்குக்கு அதிகாரம் குறைவாக இருந்ததால்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு ஆகியவற்றால் அவரது மதிப்பு சீர்குலைந்தது.
  • ஹிண்டால்கோ நிறுவனத்தின் தலைவர் ஆதித்ய பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளரான என் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. உச்சநீதிமன்றத்தின் கவனத்தை கவர்வதற்காகவே சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா, இந்த வழக்கில் என் பெயரைச் சேர்த்தார்.
  • இவ்வழக்கில் என் பெயரை சேர்க்க பிரதமர் மன்மோகன்சிங்தான் முடிவு எடுத்தார் என்கிறபோது, வழக்கில் அவர் பெயரை சேர்க்காதது ஏன்?
  • இதைத் தொடர்ந்து தற்போது முன்னாள் சி.ஏ.ஜி. வினோத் ராய் மன்மோகன்சிங்கை சிக்க வைக்கும் புத்தகத்தை வெளியிட இருக்கிறார். இது குறித்து வினோத் ராய் கூறியதாவது:
  • நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்ததை மன்மோகன்சிங் அறிவார்.
  • ஸ்பெக்ட்ரம் அறிக்கை தொடர்பான சி.ஏ.ஜி அறிக்கையில் சில காங்கிரஸ் தலைவர்கள் பெயர் இடம்பெறாமல் இருக்க மன்மோகனுக்கு நெருக்கடி தரப்பட்டது.
English summary
Revelations, allegations and secrets are being spilled out in the past one year, ever since the UPA government was on a shaky ground and who bears the brunt of all these revelations- former Prime Minister Manmohan Singh. Earlier former PM Media advisor Sanjaya Baru and Coal Secretary PC Parakh too wrote about Singh on how he chose to ignore many issues that needed his opinion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X