For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிபிஐக்கும் கமிஷனருக்கும் அப்படி என்ன வாய்க்கா தகராறு.. தீதியை "தீ"யாக்கிய சம்பவத்தின் பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    மம்தாவின் தர்ணா போராட்டத்திற்கு இதான் காரணம்- வீடியோ

    கொல்கத்தா: சிபிஐ அதிகாரிகளுக்கும் கமிஷனருக்கும் இடையே அப்படி என்னதான் விவகாரம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மத்திய அரசை கண்டித்து மம்தா பானர்ஜி நேற்று முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன

    இரவு நேரத்தில் அத்தனை மீடியாக்களையும் தூங்க விடாமல் செய்த விஷயம்தான் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பரபர பின்னணியை பார்ப்போம்.

    2013- இல் புகார்

    2013- இல் புகார்

    மேற்கு வங்கத்தை தலைமையிடமாக கொண்டு சாரதா நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடியை முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டது.

    சிபிஐ, அமலாக்கத் துறை

    சிபிஐ, அமலாக்கத் துறை

    இந்த நிலையில் கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்து வரும் ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆஜராகவில்லை

    ஆஜராகவில்லை

    இந்த மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாக தெரியவந்தது. இது குறித்து ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

    சிபிஐ அதிகாரிகள்

    சிபிஐ அதிகாரிகள்

    இந்த நிலையில் ராஜீவ் குமார் தலைமறைவாகிவிட்டதாக சிபிஐ அறிவித்தது. இதனால் அவர் எந்நேரத்திலும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில்தான் நேற்றைய தினம் ராஜீவ் குமாரை தேடி சி.பி.ஐ. இணை இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர்.

    போராட்டம்

    போராட்டம்

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் சிபிஐ அதிகாரிகளை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. தகவலறிந்த கொல்கத்தா போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு 15 சிபிஐ அதிகாரிகளை அவர்கள் கைது செய்தனர். இதனால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

    English summary
    Here is the detailed information about the incident which CBI to arrest Kolkatta Police Commissioner Rajeev Kumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X