For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல முக்கிய வழக்குகளை கையாண்ட அனுபவசாலி தீபக் மிஸ்ரா!

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான யாகூப் மேனனின் தூக்குத் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள் அமர்வில் தீபக் மிஸ்ராவும் இருந்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேனன், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள தீபக் மிஸ்ராவின் பங்கு முக்கியமானது.

உச்சநீதிமன்றத்தின் 45-ஆவது புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2018) அக்டோபர் 2-ஆம் தேதி முடிவடையும்.

1977-இல் வழக்கறிஞர்

1977-இல் வழக்கறிஞர்

கடந்த 1953ஆம் ஆண்டு அக்டோபர்மாதம் 3-ஆம் தேதி பிறந்தார். அவர் கடந்த 1977-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துக் கொண்டார். அரசியலமைப்பு, சிவில், குற்றவியல், வருவாய், சேவை மற்றும் விற்பனை வரி விவகாரங்கள் ஆகியவற்றை ஒரிசா உயர்நீதிமன்றத்தில் அனுபவமாக பெற்றுக் கொண்டார்.

நிரந்தர நீதிபதி

நிரந்தர நீதிபதி

கடந்த 1996-ஆம் ஆண்டு ஜனவரி 17-இல் ஒடிசா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பின்னர் அடுத்த ஆண்டே மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 1997-இல் அந்த நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ஆனார்.

2011-இல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி

2011-இல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி

கடந்த 2009-இல் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்றார். பின்னர் 2010-இல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். இதைத் தொடர்ந்து 2011-இல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியானார்.

3-ஆவது நபராவார்

3-ஆவது நபராவார்

நீதிபதிகளான ரங்கநாத் மிஸ்ரா, ஜிபி பட்நாயக் ஆகியோருக்கு அடுத்து ஒரிசாவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தீபக் மிஸ்ரா 3-ஆவது நபராவார்.

யாகூப் மேனன் வழக்கு

யாகூப் மேனன் வழக்கு

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேனனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேனன் கருணை மனுவை மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, யாகூப் மேனனின் மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அந்த 3 நீதிபதிகளில் தீபக் மிஸ்ராவும் ஒருவராவார்.

English summary
Chief Justice of India Dipak Misra is known for the judgment on Yakub Memon who made a last minute attempt to escape the gallows.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X