For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவின் பறிமுதலாகும் சொத்துகள்... நீதிமன்ற சிறப்பு அதிகாரி பிச்சைமுத்து விளக்கம்

By Suganthi
Google Oneindia Tamil News

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலைதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை யார், எப்படி கட்டுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பிச்சைமுத்து, 100 கோடி ரூபாயை வசூலிக்க இருக்கும் வாய்ப்புகள் குறித்து ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார்.

ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்து, 6ந் தேதி நல்லடக்கம் செய்யப்படுகிறார். அதன்பிறகு, செப்டம்பர் 14-ந் தேதியன்று உச்சநீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் கீழ் கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்தது.

அதில் ஜெயலலிதா மறைந்துவிடாலும் 100 கோடி அபராத தொகையை கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இப்போது அந்த நூறு கோடியை யார் கட்டுவார்கள், எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் தொடக்கம் முதலே சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பிச்சைமுத்துவிடம் ஒன் இந்தியா சில சந்தேகங்களை எழுப்பியது. அதற்கு அவர் கூறியதாவது:

போயஸ் கார்டன் வீடு

போயஸ் கார்டன் வீடு

ஜெயலலிதா 1991 லிருந்து 1996 ஆண் ஆண்டு வரை அவர் வாங்கிய அல்லது ஆக்கிரமித்த சொத்துக்கள் ஏலம் விடப்படும் வாய்ப்புகள் உள்ளன. போயஸ்கார்டன் வீட்டின் இரண்டு தளங்களின் மீதும் கோர்ட் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள்

தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள்

ஆனால் 1991க்குப் பிறகு கூடுதலாகக் கட்டப்பட்ட 31 ஏ என்ற எண்கொண்ட கட்டடத்தை பறிமுதல் செய்யலாம். சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், வாகனங்கள்ஆகியவற்றை ஏலம் விட்டு அபராதத் தொகையை வசூலிக்கலாம்.

நிலம்

நிலம்

ஜெயலலிதா 1991-96 வரை முதல்வராக இருந்த போது, தஞ்சை, நெல்லை, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் வாங்கப்பட்ட நிலங்களை ஏலத்தில் விட்டு வசூலிக்கலாம். ஹைதரபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சை தோட்டம் உள்ளது. ஆனால், அந்த சொத்து 1991ஆம் ஆண்டுக்கு முன்பே வாங்கப்பட்டுள்ளது.

ஆந்திரா சொத்துகள்

ஆந்திரா சொத்துகள்

அதனை அந்த திராட்சை தோட்டத்தை ஏலம் விட இயலாது. செகந்திராபாத்தில் ஜெயலலிதாவுக்கு இருக்கும் வீட்டையும் ஏலம் விட இயலாது.

கர்நாடகா அரசு குழு

கர்நாடகா அரசு குழு

ஜெயலலிதாவின் சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது என்று ஆராய்ந்து அவற்றை ஏலத்தில் விட்டு அபாரத தொகையை கர்நாடக அரசு வசூலிக்க வேண்டும். இதற்கென்று தனியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அது கர்நாடக அரசின் பொறுப்பு.

இவ்வாறு பிச்சைமுத்து கூறினார்.

English summary
Pitchaimuthu, special officer of Jayalalitha's DA case told the way and means to recover the 100 crore rupees fine. Supreme court ordered to pay 100 crore rupees fine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X