For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாரதா சிட் பண்ட் மோசடி- குணால் கோஷ் தற்கொலை முயற்சி ஏன்? பரபரப்பு தகவல்கள்

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தை உலுக்கிய சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஸ்பென்ட் செய்யப்பப்ட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Why Suspended TMC MP Kunal Ghosh attempts suicide in jail?

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல்களின் தொகுப்பு:

  • சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் குணால் கோஷ் எம்.பி. கைது செய்யப்பட்ட போது அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.
  • இந்த விசாரணையில் மேற்கு வங்க பிரபலங்கள் பலரது பெயரையும் குணால் கோஷ் வெளியிட்டார். இந்த தகவல்கள் வெளியே கசிய பலரும் அவருக்கு எதிரிகளாகிவிட்டனர்.
  • குணால் கோஷும் தாம் அப்ரூவராகிவிடுவோம்.. அதனால் பிரச்சனை இருக்காது என்றே கருதி வந்தார்..
  • ஆனால் மாதங்கள் உருண்டோடினவே தவிர அவர் குறிப்பிட்ட பிரபலங்கள் எவருமே கைது செய்யப்பட்டவில்லை. இதனால் தாம் பலியாடாகிவிட்டோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது.
  • அத்துடன் தம்மை மட்டுமே குறிவைத்து சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கே நடத்தப்படுவதாகவும் கருதியிருக்கிறார் குணால் கோஷ்.
  • மதன் மித்ரா போன்றோர் கைது செய்யப்படுவார்கள் என்று கருதியிருந்த நிலையில் அதுபோல் எதுவும் நடைபெறவில்லையே என விரக்தியடைந்து போனார் குணால் கோஷ்.
  • இதனால்தான் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பே வெளியில் சுதந்திரமாக உலா வருவோரை கைது செய்ய வேண்டும்.. இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று எச்சரித்தார் குணால் கோஷ்
  • இதனால் தாம் அறிவித்தபடியே தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.
  • அப்படி குணால் கோஷ் அப்ரூவர் ஆவது என்பது உடனே நடைபெறக் கூடியது அல்ல.. சிறிது காலமும் ஆகும்.


English summary
Suspended Trinamool Congress (TMC) MP Kunal Ghosh allegedly attempted suicide inside the Presidency Jail here where he has been lodged since last year in connection to the Saradha chit fund scam that surfaced last year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X