For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமாவளவனின் "புலனாய்வு முகம்" பற்றி தெரியுமா? கோவா சென்றது ஏன்? கொண்டாடும் சிறுத்தைகள்!

Google Oneindia Tamil News

பனாஜி (கோவா) : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கோவாவில் நடைபெறும் பல் மருத்துவர்கள் மாநாட்டில் உரையாற்றியுள்ளார்.

தடயவியல் படிப்புகளை மேற்கொண்ட வி.சி.க தலைவர் திருமாவளவன், அந்தத் துறையில் அரசு ஊழியராகவும் பணியாற்றியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமரான 3 நாளில் குவியும் கடன் உதவி... ரூ.15,000 கோடி கொடுக்கும் ஜப்பான் ரணில் விக்ரமசிங்க பிரதமரான 3 நாளில் குவியும் கடன் உதவி... ரூ.15,000 கோடி கொடுக்கும் ஜப்பான்

தடயவியல், குற்றப் புலனாய்வு குறித்து ஆழ்ந்த அறிவு கொண்ட திருமாவளவன், கோவாவில் நடைபெற்ற மாநாட்டில் பற்கள் புலனாய்வு குறித்து உரையாற்றியுள்ளார்.

திருமாவளவன்

திருமாவளவன்


வி.சி.க தலைவரும் மக்களவை எம்.பியுமான திருமாவளவன், பெரம்பலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அங்கனூரில் 1962-ல் பிறந்தவர். காட்டில் விறகு வெட்டி வாழ்க்கையை நடத்திவந்தவர் திருமாவின் தந்தை தொல்காப்பியன்.

அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் போராடி வரும் திருமாவளவன், ஓவியர், கவிஞர், நடிகர், எழுத்தாளர், முன்னாள் அரசு ஊழியர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.

அரசு ஊழியர்

அரசு ஊழியர்

திருமாவளவன் பள்ளிப் படிப்பை உள்ளூரில் முடித்தபிறகு, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பியுசி, சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை வேதியியல், முதுநிலை குற்றவியல் படிப்பு முடித்தார். பின்னர் 1988-ல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார்.

சட்டப் படிப்பை முடித்த கையோடு அதே ஆண்டில் அரசின் தடயவியல் துறையில் அறிவியல் உதவியாளர் பணியில் சேர்ந்தார். சென்னை, மதுரை, கோவை எனப் பல இடங்களில் பணியாற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பை தொடங்கிய பிறகும் அரசுப் பணியில் இருந்த திருமாவளவன், 1999-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசுப் பணியிலிருந்து விலகினார்.

 தடயவியல்

தடயவியல்


தடயவியல் படிப்புகளை மேற்கொண்டவர் என்ற முறையிலும், அந்தத் துறையில் பணியாற்றியவர் என்ற வகையிலும், தடயவியல் குறித்த ஆழ்ந்த அறிவு பெற்றவர் திருமாவளவன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தடய அறிவியல் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் பேசியுள்ளார் திருமாவளவன்.

குற்றப் புலனாய்வின்போது காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் துணையாக இருப்பது தடய அறிவியல் துறை. தடய அறிவியல் துறை தொடர்பான கல்வி, அனைத்து மாநிலங்களிலும், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

பற்கள் புலனாய்வுக்கு மிக முக்கியமான தடயமாக இருக்கிறது. அடையாளம் காணப்படாத ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டால் அதிலே பற்கள் என்பது மிக முக்கியமான ஒரு தடயம். ஆகவே, பற்கள் புலனாய்வு (Forensic odontology) என்பது ஒரு முக்கியமான கல்வி. அதை நாடு முழுக்க வளர்த்தெடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பேசினார் திருமாவளவன்.

கோவா மாநாடு

கோவா மாநாடு


இந்நிலையில்தான், கோவாவில் நடைபெறும் பல் மருத்துவர்கள் மாநாட்டில், பற்கள் புலனாய்வு குறித்து உரை நிகழ்த்துவதற்காக திருமாவளவன் எம்.பி அழைக்கப்பட்டிருந்தார்.

கோவாவில் ICED A THON எனும் பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பேணுமை துறைகளின் மாநாட்டைத் தொடங்கிவைத்து திருமாவளவன் ஆங்கிலத்தில் உரையாற்றினார். இந்த மாநாட்டில் ஏராளமான சுகாதார வல்லுநர்கள் மற்றும் தடய அறிவியல் வல்லுநர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

சிறுத்தைகள் கொண்டாட்டம்

சிறுத்தைகள் கொண்டாட்டம்

கோவாவில் நடைபெற்ற பல் மருத்துவர்கள் மாநாட்டில் திருமாவளவன் கலந்துகொண்டிருப்பதையும், ஆங்கிலத்தில் அசத்தலாக உரையாற்றியிருப்பதையும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கோவா சென்ற திருமாவளவனை தலித் பேந்தர் ஆப் இந்தியா கட்சியின் மகாராஷ்டிரா மாநில பொறுப்பாளர்கள் சந்தித்தனர். திருமாவளவன், தலித் பேந்தர் ஆப் இந்தியா அமைப்பிலும் பணியாற்றியவர். 1990ஆம் ஆண்டு தலித் பாந்தர் அமைப்பின் தமிழ்நாடு அமைப்பாளராக திருமாவளவன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

English summary
VCK leader Thirumavalavan MP addressed a dentists conference in Goa on Forensic Odontology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X