For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரண்டே தொகுதிகளில் ஜெயித்த உங்களுக்கு ஆட்சியா? பாஜகவுக்கு எதிராக கொந்தளிக்கும் ராகுல்காந்தி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: வெறும் 2 தொகுதிகளை வென்ற பாஜக மக்கள் தீர்ப்புக்கு எதிராக மேகாலயாவில் ஆட்சியமைக்க முயல்வதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டில், வெறும் 2 தொகுதிகளை வென்ற பாஜக, மேகாலயாவில் மோசடி வழியில் ஆட்சியை பிடிக்க முயலுகிறது. மணிப்பூர் மற்றும் கோவா போல, மக்கள் தீர்ப்புக்கு எதிராக பாஜக நடந்துகொண்டுள்ளது.

With just 2 seats, the BJP has usurped power in Meghalaya: Rahul Gandhi

அதிகார தாகத்தால், பெரும் பணத்தை செலவிட்டு, சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றபோதிலும், மேகாலயாவில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் கட்சி உரிமை கோரியுள்ளது.

எப்படியாவது பெரும்பான்மைக்கு தேவைப்படும் எம்எல்ஏக்களை ஈர்த்து ஆட்சியமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
"With just 2 seats, the BJP has usurped power in Meghalaya, through a proxy. Like in Manipur & Goa, showing utter disregard for the mandate of the people. Obsessed instead with grabbing power, using big money to create an opportunistic alliance"says Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X