For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதவியேற்ற கையோடு வீட்டுக்கு சென்ற முதல்வர்கள்.. எடியூரப்பா மட்டுமில்லை... ஒரு பெரிய பட்டியலே இருக்கு

பதவியேற்ற கையோடு வீட்டுக்கு சென்ற முதல்வர்கள் வரிசையில் எடியூரப்பா மட்டும் இடம்பிடிக்கவில்லை.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெங்களூர்: முதல்வராக பதவியேற்ற இரண்டே நாளில் பதவியை ராஜினாமா செய்த வரிசையில் எடியூரப்பா மட்டுமில்லை. மிகப் பெரிய பட்டியலே இருக்கிறது.

கர்நாடகத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் எண்ணிக்கையின் அடிப்படையில் மாநில முதல்வராக எடியூரப்பா வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.

Yeddyurappa, not the CM with shortest stint: Find out who it is

இதனால் எந்த எல்லைக்கும் சென்றாவது ஆட்சியை தக்க வைத்து கொள்ளலாம் என்ற கனவில் பாஜக இருந்தது. ஆனால் காங்கிரஸ்- ஜேடிஎஸ் முயற்சியின் பேரில் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு நாள் மட்டுமே கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் அளித்தது.

இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இது போல் பதவியேற்ற குறுகிய காலத்திலேயே பதவியை ராஜினாமா செய்தவர்களில் எடியூரப்பா மட்டுமில்லை. மிகப் பெரிய பட்டியலே இருக்கிறது.

  • ஜகதாம்பிகா பால்- கடந்த 1988-இல் உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்ற ஒரே நாளில் பதவியை ராஜினாமா செய்தார்.
  • பிஎஸ் எடியூரப்பா- கடந்த 2007-இல் கர்நாடகா முதல்வராக பதவியேற்ற 7 நாட்களில் ராஜினாமா
  • பிஎஸ் எடியூரப்பா- 2018-இல் கர்நாடக முதல்வராக பதவியேற்ற 2 நாளில் ராஜினாமா
  • சதீஷ் பிரசாத்- கடந்த 1968-ஆம் ஆண்டு பீகார் முதல்வராக பதவியேற்ற ஒரு வாரத்தில் ராஜினாமா
  • எஸ்.சி. மாராக்- 1998-இல் மேகாலயா முதல்வராக 13 நாட்கள் பதவி வகித்தார்.
  • ஜானகி ராமசந்திரன்- 1988-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக 23 நாட்கள் இருந்தார்.
  • சி.எச். முகமது கோயா- கடந்த 1979-ஆம் ஆண்டு கேரள முதல்வராக 45 நாட்கள் மட்டுமே பதவி வகித்தார்.
English summary
B S Yeddyurappa resigned as Chief Minister of Karnataka, just two days after he took oath. Prior to this he has been a Chief Minister for seven days.Is he is the shorted serving Chief Minister in the country. Here is a list of the shortest serving Chief Ministers India has seen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X