For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசா காலம் முடிந்தும் அமெரிக்காவில் நைசாக தங்கிய 14,000 இந்தியர்கள்

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் விசா காலாவதியான பிறகும் 14 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பாமல் அங்கியே தங்கிவிட்டது தெரிய வந்துள்ளது.

பி1/பி2 விசாக்களில் அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர்களில் 7.6 லட்சம் பேர் கடந்த 2014ம் ஆண்டு நாடு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அதில் 14 ஆயிரம் விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவிலேயே தங்கிவிட்டனர் என்று அந்நாட்டு உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

14,000 Indians overstayed in U.S. last year

என்ட்ரி/எக்சிட் ஓவர்ஸ்டே அறிக்கையை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. அதில் தான் 14 ஆயிரம் இந்தியர்கள் விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவிலேயே தங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விமானம் மற்றும் கப்பல் மூலமாக அமெரிக்காவுக்கு வந்தவர்களில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 127 பேர் விசா காலாவதியான பிறகும் நாடு திரும்பவில்லை. அந்த அறிக்கையில் எப்-1 விசா அல்லது ஹெச்-1 பி விசா மூலம் வந்தவர்களை கணக்கில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டு ஆண்டு இறுதியில் விசா காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கியவர்களின் எண்ணிக்கை மட்டும் 4 லட்சத்து 82 ஆயிரத்து 781 ஆகும். தீவிரவாதத்துடன் தொடர்புடைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் விசா காலம் முடிந்தும் நாடு திரும்பாமல் உள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த 1,435 பேரும், ஈராக்கைச் சேர்ந்த 681 பேரும், ஈரானைச் சேர்ந்த 564 பேரும், சிரியாவைச் சேர்ந்த 440 பேரும், ஏமனைச் சேர்ந்த 219 பேரும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 219 பேரும், லிபியாவைச் சேர்ந்த 56 பேரும் விசா காலாவதியாகியும் அமெரிக்காவிலேயே தங்கியுள்ளனர்.

Over 14,000 of the 8.8 lakh Indians on visitors or business visas overstayed in the United States last year, according to official figures.

60 words

English summary
Over 14,000 of the 8.8 lakh Indians on visitors or business visas overstayed in the United States last year, according to official figures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X