For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பு ஒப்பந்த நடைமுறைகள் தொடக்கம்

பிரான்ஸ் மராகெச் நகரத்தில் சர்வதேச சூரிய மின் சக்தி கூட்டமைப்பு தொடங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

Google Oneindia Tamil News

பாரிஸ்: பிரான்ஸ் மராகெச் நகரத்தில் சர்வதேச சூரிய மின் சக்தி கூட்டமைப்பு தொடங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில் 20-க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்றுள்ளன.

சூரிய மின் சக்திக்கு உலக அளவில் ஒருங்கிணைந்த சந்தையை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பினை ஏற்படுத்த திட்டமிட்டன. இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி மூளையாக செயல்பட்டார். இந்தக் கூட்டமைப்புக்கான தலைமையகம் இந்தியாவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

20 nations sign framework agreement of ISA as process begins

சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பினை கட்டமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் அதனைத்தொடர்ந்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நடைமுறையும் பாரிஸ் மாராகெச் நகரத்தில் இன்று தொடங்கியுள்ளது.

இக்கூட்டத்தில் இந்தியா, பிரான்ஸ் பிரேசில் உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்று சர்வதேச சூரிய மின் சக்தி கூட்டமைப்பு கட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக கூறப்படுகிறது.

சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டால் சூரிய மின் சக்தியின் மொத்த தேவை, தரமான சூரிய மின் சக்தியை உருவாக்குதல், சூரியமின் சக்தி விலை குறைவுக்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று சுற்றுச் சூழல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டமைப்பு ஐ.நா சாசனத்தின் சரத்து 102 -ன்படி பதிவு செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை உலகம் முழுவதும் உள்ள 70 நாடுகள் ஆதரிக்க முன் வந்துள்ளன. இந்தக் கூட்டமைப்பினை பிரதமர் மோடியும் பிரான்ஸ் அதிபர் பிராங்காய் ஹாலண்டேவும் கடந்த ஆண்டு பாரிசில் நடந்த பருவ நிலை மாற்றம் தொடர்பான 21-வது மாநாட்டின்போது கூட்டாக தொடங்கி வைத்தனர்.

தற்போது, பருவ நிலை மாற்றம் தொடர்பான 22-வது மாநாடு பிரான்ஸ் மராகெச் நகரத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், அந்த மாநாட்டினையொட்டி சூரிய மின் சக்திக்கான சர்வதேச சூரிய கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான கட்டமைப்பு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.

அதற்கான ஆலோசனைகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சர்வதேச சூரிய மின் சக்தி கூட்டமைப்பு கட்டமைப்புக்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Marrakech: Over 20 countries, including Brazil and France, today became signatories to the framework agreement of the International Solar Alliance an initiative that is the brainchild of Prime Minister Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X