அமெரிக்காவில் 19 வயது இந்தியர் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை.. தொடரும் கொலைகளால் பீதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிகாகோ: அமெரிக்காவில் 19 வயது இந்திய இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்களும் இந்தியர்கள் கொல்லப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் நாதியட் பகுதியை சேர்ந்த இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது உறவினர் படுகாயமடைந்துள்ளார்.

சிகாகோவின் டெல்டான்..

சிகாகோவின் டெல்டான்..

குஜராத் மாநிலம் நாதியட் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் அர்ஷன் வோரா. அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தின் டெல்டான் பகுதியில் பெட்ரோல் பங்கு மற்றும் அதன் அருகிலேயே வீட்டோடு இணைக்கப்பட்ட கடையை நடத்தி வந்துள்ளனர்.

தடுக்க முயன்றபோது

தடுக்க முயன்றபோது

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை அங்கு வந்த மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்றது. இதனை அர்ஷத் வோரா மற்றும் அவரது உறவினர் தடுக்க முயன்றனர்.

இளைஞர் உயிரிழப்பு

இளைஞர் உயிரிழப்பு

அவர்களை கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதில் 19 வயது இளைஞரான அர்ஷத் வோரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

பெயரை வெளியிட மறுப்பு

பெயரை வெளியிட மறுப்பு

காயமடைந்தவர் குறித்த பெயரை வெளியிட சிகாகோ போலீசார் மறுத்துள்ளனர். ஆனால் காயமடைந்தவர் 55 வயது மதிக்கத்தக்கவர் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.

பரிசுத் தொகை அறிவிப்பு

பரிசுத் தொகை அறிவிப்பு

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க உதவுவோருக்கு 12ஆயிரம் டாலர்கள் பரிசு தொகை அறவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 19 year old indian killed in Chicago by robbers. Injured another one is critical condition. The youth killed is belongs to Gujarat.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற