விளையாட்டு விபரீதம்.. அறைந்து விளையாடும் போட்டியில் பாகிஸ்தான் சிறுவன் மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அறைந்து விளையாடும் போட்டியில் சிறுவன் மரணம்!- வீடியோ

  இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இரண்டு பள்ளி சிறுவர்கள் அறைந்து விளையாடும் போட்டியில் விளையாடிக்கொண்டு இருந்த போது ஒரு மாணவன் இன்னொரு மாணவனின் வேகமான அறை காரணமாக மரணமடைந்து இருக்கிறான்.

  பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளி இடைவேளை நேரத்தில் பிலால், அமீர் ஆகிய மாணவர்கள் ''தபார் கபடி'' எனப்படும் கன்னத்தில் அறைந்து விளையாடும் போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

  A Pakistan student dies during a slap fight game in School

  பல மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த போட்டி நடைபெற்று இருக்கிறது. இந்த போட்டியின்படி ஒருவர் இன்னொருவரை மிகவும் வேகமாக அறைய வேண்டும். யார் வலி தாங்காமல் போட்டியில் இருந்து விலகுகிறார்களே அவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படுவார்.

  இந்த நிலையில் பிலாலுக்கும் அமீருக்கும் இடையில் போட்டி சுமுகமாகவே நடந்துள்ளது. ஆனால் கடைசியில் அமீரின் வேகமான அறையை பிலாலால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஒரு சமயத்தில் அமீர் அறைந்ததில் பிலால் மயங்கி விழுந்துள்ளான்.

  பிலாலின் கழுத்து அப்படியே மொத்தமாக திரும்பி இருக்கிறது. இதில் அவன் மூச்சு விடமுடியாமல் திணறி உள்ளான். இந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவன் மரணம் அடைந்து இருக்கிறான்.

  போலீஸ் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்த மாணவர்கள் அறைந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A Pakistan student named Bilal dies during a slap fight game with his friend Amir in School. He died due to air lock in his lungs.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற