For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாய் ஈமான் அமைப்பின் முயற்சியால் மனநலம் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பத்துடன் சேர்ப்பு

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டம் வி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் பெரியசாமி 14.06.2014 அன்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதன் விவரம் வருமாறு,

துபாய் மருத்துவமனையில் மனநலம் பாதிப்பட்ட இந்தியர் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய கன்சுலேட்டின் தகவலையடுத்து ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஏ முஹம்மது தாஹா மருத்துவமனைக்கு விரைந்தார்.

A TN based family thanks Dubai IMAN organization

மருத்துவமனையில் சுப்ரமணியன் பெரியசாமியின் நிலைமையினை உணர்ந்து அவரிடம் இருந்த அலைபேசியை சோதனையிட்டதில் அவரது மனைவியின் தொடர்பு எண் கிடைத்து அவரிடம் தொடர்பு கொண்டார். பின்னர் அவரது மகன் சரவணன் சென்னையில் இருப்பதாகவும் அவரின் தொடர்பு எண்ணையும் அவர் கொடுத்தார். அவரது மகனிடம் விபரத்தைக் கூறினார். கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக தங்களது தந்தை எங்கே இருக்கிறார் எனத் தெரியாமல் இருந்தோம். தங்களது தகவலையடுத்து அவர் துபாய் மருத்துமனையில் இருப்பதை தெரிந்து கொண்டோம் என்றார். அவரை தாயகத்திற்கு அழைத்து வருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் இந்திய கன்சுலேட், இந்திய சமூக நல மையம் ஆகியவற்றின் உதவியுடன் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா ஆகியோர் சுப்ரமணியனை அவரது மகன் சரவணனிடன் ஒப்படைத்தனர்.

சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக எவ்வித தகவலும் இல்லாமல் இருந்த சுப்பிரமணியனை அழைத்து வந்து ஒப்படைத்த துபாய் இந்திய கன்சுலேட், இந்திய சமூக நல மையம் மற்றும் ஈமான் அமைப்பினருக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

English summary
IMAN has helped a TN based family to reunite with their missing family member Subramanian Periasami who was taking treatment in Dubai hospital for mental illness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X