தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை.. ஆபரேஷன் இன்றி அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை

  நியூயார்க்: அமெரிக்காவில் திருநங்கை ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து இருக்கிறார். உலகிலேயே தாய் பால் கொடுத்த முதல் திருநங்கை இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  இவர் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. இவருக்கு 35வயது நிரம்பி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  'மவுண்ட் சினாய் செண்டர் ஃபார் டிரான்ஸ்ஜெண்டர் மெடிசின் அண்ட் சர்ஜரி' என்ற மருத்துவமனையில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இது எப்படி நடந்தது என்று அந்த மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

  வாடகைத் தாய்

  வாடகைத் தாய்

  அந்தத் திருநங்கை வாடகைத்தாய் மூலமே குழந்தை பெற்று இருக்கிறார். ஆனால் அந்தப் பெண் குழந்தைக்குப் பால் கொடுக்க வாடகைத்தாய் மறுத்து உள்ளார். இதனால் கடைசி நேரத்தில் இந்தத் திருநங்கை பெண்ணைப் பால் கொடுக்கும்படி மருத்துவர்கள் அழைத்து இருக்கிறார்கள்.

  சாதனைச் செய்தார்

  சாதனைச் செய்தார்

  கடந்த மூன்று மாதங்களில் அந்தத் திருநங்கை ஒரு நாளுக்கு 8 அவுன்ஸ் பால் உற்பத்தி செய்து இருக்கிறார். இதனால் அவர் பால் கொடுப்பதில் எந்த வித தவறும் இல்லை என்றுள்ளனர். அதேபோல் முறையான சோதனைக்கு பின் பால் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

  எப்படி சாத்தியம் ஆனது

  எப்படி சாத்தியம் ஆனது

  இதற்காக இவருக்கு எந்த வித ஆபரேஷனும் செய்யவில்லை. கனடாவில் இருந்து ஹார்மோனை மாற்றக் கூடிய மருத்துவ முறைகள் மூலம் இந்தச் சாதனை செய்யப்பட்டு உள்ளது. குழந்தை பிறப்பதற்கு 5 மாதத்திற்கு முன்பே இந்த மருத்துவ முறை மூலம் அவருக்குப் பால் சுரக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  6 மாதம்

  6 மாதம்

  இதன் மூலம் இவர் இன்னும் 6 மாதத்திற்குப் பால் கொடுக்க முடியும். அதன்பின் சரியான உணவு முறைகள் மூலம் மேலும் பால் கொடுக்க வைக்கலாம். இல்லை என்றால் குழந்தைக்கு அதற்கு ஏற்றப் புரத பொருட்களை நேரடியாக உணவில் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A transgender woman breastfeeds for the first time in the World. America's Mt Sinai Center for Transgender Medicine and Surgery doctors made this achievement.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற