அன்று தந்தை.. இன்று மகன்... வந்து பார்-தாலிபான்களை வெச்சுசெய்ய காத்திருக்கும் பஞ்ச்சீர் போராளிகள்!

Subscribe to Oneindia Tamil

பஞ்ச்சீர்: ஆப்கானிஸ்தானையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக அறிவிக்கும் தாலிபான்கள்... ஆனால் எங்கே பஞ்ச்சிர் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்துதான்பாருங்க என சவால்விடும் போராளிகள்.. பஞ்ச்சிர் மாகாணத்தில் தாலிபான்களுக்கும் போராளி குழுக்களுக்கும் இடையே எந்த நிமிடத்திலும் யுத்தம் வெடிக்கலாம் என்கிற நிலை உள்ளது.

1970களின் இறுதியில் ஆப்கானிஸ்தானை அன்றைய சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்திருந்தது. சோவியத் ஒன்றியத்தின் ஆட்சிக்கு எதிராக ஏராளமான ஆப்கான் போராளி குழுக்கள் உதயமாகின. கம்யூனிசத்தை கடுமையாக எதிர்க்கும் முஜாஹிதீன் குழுக்கள் மிக முக்கியமானவையாக இருந்தன.

கம்யூனிஸ்டுகளும் முஜாஹிதீன்களும் தத்துவார்த்த அடிப்படையில் நேர் எதிரானவர்கள். இதனால் முஜாஹிதீன்கள் மீது சோவியத் ஒன்றியம் கடும் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது. அப்போது சில முஜாஹிதீன் குழுக்களுக்கு அமெரிக்கா ஆதரவு தந்தது. அப்போது எல்லாம் தாலிபான்கள் இயக்கம் பிறக்க கூட இல்லை. சோவியத் ஆட்சியில் அவ்வளவு பெரிய ராணுவத்துக்கு ஆகப் பெரும் சவாலாக இருந்தவர் பஞ்ச்சிர் மாகாணத்து முஜாஹிதீன்கள்.

தாலிபான்களுடனும் மோதல்

தாலிபான்களுடனும் மோதல்

ஆப்கானிஸ்தானைவிட்டு சோவியத் படைகள் வெளியேறிய காலம்... மெல்ல மெல்ல தாலிபானிகள் கருக் கொண்டு 1996-ல் ஆப்கானை கைப்பற்றிய சூழல்.. அப்போதும் பஞ்ச்சிர் மாகாணம் தாலிபான்களுக்கு அடிபணியவில்லை. அத்துடன் ஒட்டுமொத்த வடக்கு ஆப்கானிஸ்தானும் பஞ்ச்சிர் போராளிகள் படையிடமே இருந்தன. இன்னும் சொல்லப் போனால் சீனா, தஜிகிஸ்தான் எல்லைகள் அனைத்தும் இவர்கள் வசம்தான் இருந்தன. சோவியத் யூனியன் படையையே எதிர்த்து களமாடிய பஞ்ச்சீர் முஜாஹிதீன்களுக்கு தாலிபான்கள் அப்படி ஒன்றும் கடினாமான எதிரிகளாகத் தெரியவில்லை. அதனால் தாலிபான்கள் ஆட்சிக் காலத்திலும் பஞ்ச்சிர் மாகாணம் அடிபணியாமல்தான் இருந்தது.

எங்கெங்கும் போராளிகள்

எங்கெங்கும் போராளிகள்

இந்த போராளிக் குழுக்கள், வடக்கு கூட்டணி படைகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. பஞ்ச்சிர் சிங்கம் என அழைக்கப்படும் அகமது மசூத் ஷா தலைமையில்தான் இந்த படை இயங்கியது. இதுதான் சோவியத் யூனியன் படைகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கியது. தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பேராதரவு இந்த படைகளுக்கு உண்டு என்கிற ஒரு கருத்தும் உண்டு. பிஞ்சு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கைகளில் ஆயுதங்களுடன் வலம் வரும் காட்சிகளைத்தான் பஞ்ஷ்சிர் மாகாணத்தில் பார்க்க முடியும். அந்த அளவுக்கு ரத்தத்திலும் ஆதிக்க எதிர்ப்பு உணர்வு ஊறிப் போய்கிடக்கிறது அங்கே. பஞ்ச்சீர் சிங்கம் மசூத், 2001-ல் அல்கொய்தா பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அந்த கோபம் இன்னமும் பஞ்ச்சீர் மாகாணத்தில் தணியவும் இல்லை.

பஞ்ச்சீர் போராளிகள் யார்?

பஞ்ச்சீர் போராளிகள் யார்?

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள், பஷ்தூன்கள் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒரு பிரிவினர் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிராகுயி மொழி பேசுகின்றனர். இந்த மொழியிலான உரையாடலை கேட்டால் தமிழுக்கு மிக நெருக்கமானதாகவே உணர முடியும். ஆனால் பஞ்ச்சீர் போராளிகளோ தஜிக் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். கடந்த 20 ஆண்டுகால ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திடம் பஞ்ச்சீர் மாகாணத்துக்கு தன்னாட்சி அதிகாரம் கோரி வந்தனர்.

ஓங்கிய தாலிபான்கள் கை

ஓங்கிய தாலிபான்கள் கை

தற்போது அமெரிக்கா நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டன. அமெரிக்காவைப் பொறுத்தவரை தாலிபான்களுடன் போரிடும் வல்லமை கொண்டது ஆப்கானிஸ்தானிய படைகள் என கணக்குப் போட்டது. ஆனால் தாலிபான்களுடன் யுத்தம் கூட செய்யாமல் அப்படியே சரணாகதி அடைந்தது ஆப்கான் படைகள். பல்லாயிரக்கணக்கான ஆப்கான் படையினர் நாட்டை விட்டு தப்பி ஓடி அகதிகளாகிவிட்டனர். இதனால் 2 வாரங்களிலேயே ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷிர் தவிர அத்தனை மாகாணங்களும் தாலிபான்கள் வசமாகின. இப்போதும் பஞ்ஷ்சிர் மாகாணம், போராளிக் குழுக்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

அடிபணிய முடியாது என பிரகடனம்

அடிபணிய முடியாது என பிரகடனம்

இப்போது வடக்கு கூட்டணி படைகளை அகமது மசூத் ஷாவின் மகன் அகமது மசூது தலைமை ஏற்று வழிநடத்துகிறார். ஆப்கான் படைகளிடம் இருந்த அமெரிக்கா ஆயுதங்கள் அத்தனையும் இப்போது தாலிபான்கள். ஆனாலும் தாலிபான்களை களத்தில் சந்திக்க தயார் என அறைகூவல் விடுத்துள்ளது வடக்கு கூட்டணிப் படைகள். ஆனால் தாலிபான்களோ, நீங்கள் சரணடைந்துவிடுங்கள்.. அமைதியாக பேச்சுவார்த்தை நடத்துவோம் என்கிறது. இதற்கு அகமது மசூது மறுத்துவிட்டதால் 100க்கும் மேற்பட்ட தாலிபான்கள் பஞ்ச்சிர் மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பஞ்ஷ்சிர் மாகாணத்தில் எந்த நிமிடத்திலும் யுத்தம் வெடிக்கும் நிலைதான் உள்ளது. அதேநேரத்தில் ஒட்டுமொத்த உலகமும் தாலிபான்களை எதிர்ப்பதால் உலக நாடுகள் தங்களுக்கு நவீன ஆயுதங்களை கொடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் பஞ்ச்சிர் பள்ளத்தாக்ல்கு போராளிகளிடம் உண்டு. மேலும் ஆப்கான் துணை அதிபராக இருந்தவும் தற்போதைய ஆப்கான் அதிபர் நானே என பிரகடனம் செய்தவருமான அம்ருல்லா சாலே தாலிபான்களிடம் சரணடைய மறுத்துள்ளார். அம்ருல்லா சாலவேவும் இப்போது பஞ்ச்சிர் மாகாணத்தில்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+